சென்னையைச் சுத்துப் போடும் மேகங்கள்.. அலறிய செல்போன்கள்! ராத்திரி மெகா சம்பவம்! விரைந்த என்டிஆர்எஃப்

  • சென்னை: சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இன்று அதி கனமழைக்கும் சென்னை, புறநகரின் ஒருசில இடங்களில் 20 செ.மீ. மழைக்கும் வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை சென்னைக்கு NDRF-ன் மேலும் 3 மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும் தகவல்கள் உலாவுகின்றன.

    Advertisement

    சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது.

    இனி சென்னையில் மேகவெடிப்புகள் அதிகமாகும்! திருப்புகழ் குழு அறிக்கையை உடனே வெளியிடுங்க! அன்புமணி

    மேலும், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக முக்கியச் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தாம்பரம், பல்லாவரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஜி.எஸ்.டி சாலை கிழக்கு தாம்பரம், மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை மற்றும் முடிச்சூர் சாலைகளில் மழைநீர் தேங்கி ஆறாக ஓடியது.

    Advertisement
    Where Is KAS?: ஆமா எல்லாம் சரி! பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை களத்திலே காணோமே!

    மேலும், வடசென்னை பகுதிகளில் இன்று அதி கனமழைக்கும் சென்னை, புறநகரின் ஒருசில இடங்களில் 20 செ.மீ. மழைக்கும் வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், மாநகரத்தில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் சைரன் சத்தத்துடன் கூடிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மூன்று மீட்புக் குழுக்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறையின் கோரிக்கையை ஏற்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் அமைந்துள்ள 04-வது தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனில் இருந்து இக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மீட்புக் குழுவிலும் தலா 30 வீரர்கள் என மொத்தம் 90 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    04-வது பட்டாலியன் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின்பேரில், பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு, பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai faces an IMD red alert for extremely heavy rainfall as 90 NDRF personnel arrive to support flood preparedness.