சென்னை மக்களின் செல்போன்களில் திடீரென ஒலித்த அலாரம்.. அதி கனமழை வாய்ப்புள்ளதால் தமிழக அரசு அலர்ட்

  • சென்னை: சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகர மக்களுகுக் செல்போன்கள் வாயிலாக தமிழக அரசு மழை குறித்த எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. சென்னை மக்களின் செல்போன்களுக்கு எச்சரிக்கை ஒலியுடன் இந்த அலர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், துவக்க காலத்திலேய மழை வெளுக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய விட்டு விளாசியது. சென்னை பாரிமுனை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

    Advertisement

    இதனால், நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக நேற்று மாலை 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக ஆக.. வேகம் பிடித்த மழை நள்ளிரவு தாண்டியும் கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 361 மில்லி மீட்டர் மழை பெயதது. நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது.

    இந்த நிலையில் சென்னையில் இன்றும் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் வெள்ளம் தேங்கும் பகுதிகளில் ராட்சத மோட்டார்களுடன் மாநகரட்சி ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகர மக்களுகுக் செல்போன்கள் வாயிலாக மழை குறித்த எச்சரிக்கை தகவலை தமிழக அரசு அனுப்பியுள்ளது.

    Advertisement
    Red alert: சென்னைக்கு இன்று ”ரெட் அலர்ட்..” கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. ஐஎம்டி

    செல்போன்களுக்கு எச்சரிக்கை ஒலியுடன் வந்த அலர்ட் மெசேஜில் கூறப்பட்டு இருந்ததாவது:- சென்னையில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது விடுக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் எச்சரிக்கை ஒலியுடன் இந்த அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த எச்சரிக்கை அலர்ட் ஆன கொடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai: With a 'red alert' issued for extremely heavy rainfall in Chennai today, the Tamil Nadu government has sent warning messages regarding the rain to the mobile phones of the city's residents. These alert messages were delivered to the mobile phones of people in Chennai, accompanied by a warning sound.