இனிமேல் சாப்பாடு கிடையாது.. தூய்மைப் பணியாளர்களுக்கு இனி கூடுதல் சம்பளம்! அதிரடியாக வெளியான அரசாணை!

  • சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலை உணவுக்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது. 92% தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உணவு வேண்டாம், உணவுப் படி வழங்க வேண்டும் என கேட்டதால் நடவடிக்கை என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம். அப்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை துவங்கி வைத்திருந்தார்.

    Advertisement

    சுமார் 24000 தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் மூலம் காலை உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உணவின் தரம் சரியில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலாக உணவு படி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில் இனிமேல் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படாது எனவும், உணவுப் படியாக தினசரி 50 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அரசாணையில்," பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களின் வேலை நேரத்திற்கு ஏற்ப காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்த நிறுவனத்திற்கு மூன்று ஆண்டு காலத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டம் 15.11.2025 முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

    Advertisement

    ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு விநியோகம் செய்யப்படாதது சமையலறைகளில் நிலவும் சுகாதார குறைபாடுகள், மூலப் பொருட்களின் தரக்குறைபாடுகள், பாத்திரங்களின் தரம் மற்றும் பராமரிப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக தூய்மைப் பணியாளர்கள், திட்டக் கண்காணிப்பு ஆலோசகர்கள் (PMC) மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.

    இது சம்பந்தமாக, மண்டலம் 1 முதல் 15 வரை பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம், தற்போது வழங்கப்பட்டு வரும் உணவினை தொடர்ந்து வழங்கலாமா என்பது குறித்து கணக்கெடுப்பு மற்றும் கருத்துக் கேட்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், சுமார் 92 சதவீத தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவிற்கு பதிலாக உணவு படி, பணமாக வழங்க வேண்டும் எனவும், அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தற்போது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில், உணவு விநியோகித்து வரும் ஒப்பந்ததரரான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும்,
    பெருநகர சென்னை மாநகராட்சியின், அண்டை வீட்டு குழு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களான உர்பேசர் சுமீத் மற்றும் சென்னை என்விரோ சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து 24,264 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு, தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு மாற்றாக, உணவுப்படியாக ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு ரூ.50/- வீதம், பணிக்கு வருகை புரியும் நாட்களுக்கு மட்டும் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் தொகையினை ஊதியத்துடன் சேர்த்து வழங்குவதற்கு அனுமதியும், மேற்குறிப்பிட்டுள்ள 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு நாளிற்கு ரூ.50/- வீதம் உணவுப்படியாக வழங்குவதற்கு, ஆண்டிற்கு ஏற்படும் மொத்த செலவினமான ரூ.44,28,18,000/- (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே இருபத்தெட்டு லட்சத்து பதினெட்டு ஆயிரம் மட்டும்)க்கு நிர்வாக அனுமதியும் வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோரியுள்ளார்.

    Advertisement

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் கருத்துரு கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்கலாம் என அரசால் முடிவு செய்யப்பட்டு பின்வருமாறு ஆணையிடப்படுகிறது;- தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில், உணவு விநியோகித்து வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்திட அனுமதி வழங்கப்படுகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின், அண்டை வீட்டு குழு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களான திருவாளர்கள். உர்பேசர் சுமீத் மற்றும் திருவாளர்கள். சென்னை என்விரோ சொலுசன்ஸ் நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து 24,264 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் உணவிற்கு மாற்றாக, உணவுப்படியாக ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு ரூ.50/- வீதம், பணிக்கு வருகை புரியும் நாட்களுக்கு மட்டும் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் தொகையினை ஊதியத்துடன் சேர்த்து பணமாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    Advertisement

    மேற்குறிப்பிட்டுள்ள 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு நாளிற்கு ரூ.50/- வீதம் உணவுப்படியாக வழங்குவதற்கு, ஆண்டிற்கு ஏற்படும் மொத்த செலவினமான ரூ.44,28,18,000/- (ரூபாய் நாற்பத்து நான்கு பதினெட்டு ஆயிரம் கோடியே மட்டும்)க்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதியின் மூலம் இருபத்தெட்டு லட்சத்து செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai Corporation cancels meal supply for sanitation workers and approves ₹50 daily food allowance for 24,264 workers.