மாத்திரையை குழம்பில் கலந்து கணவரை காலி செய்த மனைவி.. அப்பா ரூமில் புகை வருதே.. கதி கலங்கிய சென்னை

  • சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீஸ் எஸ்.ஐ. ராஜ் (58) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட சம்பவம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கொலை வழக்காக மாறியுள்ளது... சமீபத்தில் வீட்டு பக்கத்திலேயே எஸ்ஐ ராஜ் சிசிடிவி கேமராவை பொருத்தி வைத்திருக்கிறார்.. இதற்கான காரணம் என்ன என்று ஆராயும்போதுதான் 2 கொலையாளிகளி வசமாக சிக்கி விட்டார்கள். என்ன நடந்தது?

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்.. 58 வயதாகிறது.. 1992-ல் காவலராக பணியில் சேர்ந்து, சீனியாரிட்டி அடிப்படையில் சென்னை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர்

    Advertisement

    கன்னியாகுமரி தம்பதி

    இவரது மனைவி செல்வராணியுடன் நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை வீட்டின் கீழ்தளத்தில் ராஜ் ரூமிலிருந்து புகை வந்துள்ளது.. உள்ளே சென்று பார்த்தபோது, ராஜ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அலறிய செல்வராணி, உடனடியாக, போலீசுக்கு தகவல் தந்தார்.. தன்னுடைய கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாவும் புகார் அளித்தார்.

    இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. அந்த ரிப்போர்ட் வந்தபிறகுததான், ராஜுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, கழுத்தும் பலமாக இறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    Advertisement

    சிசிடிவி காட்சியில் சிக்கிய உருவம்

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வீட்டை சுற்றிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போது, சம்பவ தினத்தன்று மாலை 4.15 மணிக்கு, இளைஞர் ஒருவர் அவசரமாக, ரதாஜ் வீட்டில் இருந்து வெளியேறி பைக்கில் வேகமாக சென்றதும் பதிவாகியிருந்தது. இதற்கு பிறகுதான் செல்வராணியை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர்.. வேறுவழியின்றி, கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றுவிட்டதாக செல்வராணி ஒப்புக் கொண்டுள்ளார்.

    தன்னுடைய வாக்குமூலத்தில் செல்வராணி, "எனக்கு ராஜ் 2வது கணவர். எனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். எனக்கும், முதல் கணவருக்கும் 1 மகள் இருக்கிறாள்.. என் மகளுடன்தான் வசித்து வந்தேன். அப்போது எஸ்ஐ ராஜ் நட்பு கிடைத்தது. அவரும் திருமணம் ஆகாமல் இருந்ததால், என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னார்.. என் மகளையும், தன் மகளாக ஏற்றுக்கொள்வதாக உறுதி தந்தார்.

    Advertisement

    26 வயது வித்தியாசம்

    எனக்கும், ராஜுக்கும் 26 வயது வித்தியாசம்.. எனினும் என்னுடைய எதிர்காலம் கருதி, அவரை திருமணம் செய்துகொண்டேன், 16 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது.. ராஜிக்கும் எனக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து 10 வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம். நான் விருப்பப்ட்டதால் என்னை வக்கீலுக்கு படிக்க வைத்தார்.

    எனக்கு 32 வயதாகிறது, கணவருக்கு 58 வயதாகிறது.. இந்த வயது மூப்பு காரணமாக அவர், தம்பத்திய உறவில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தார். இந்த நேரத்தில், வீட்டு பக்கத்தில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், என் கணவர் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் போக்சோ பதிவு செய்தனர். ஆனால், என் கணவர் நிரபராதி என்பதால், அனைத்து ஆதாரங்களையும் போலீசாரிடம் தந்தார். நிரபராதி என்றாலும், போக்சோ பதியப்பட்டதால், முற்றிலும் தாம்பத்திய உறவில் இருந்து விலவிவிட்டார்.

    Advertisement

    கண்காணித்த போலீஸ் கணவர்

    நான் வழக்கறிஞர் என்பதால், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவர் அறிமுகமானார்.. அவரிடம் அடிக்கடி பேசி வந்தேன். ஒரு கட்டத்தில் நெருங்கி பழகினேன்.. இது ராஜிக்கு தெரியவந்து, தேவா உடனான தொடர்பை துண்டிக்கும் படி சொன்னார்ல.. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. எனது கணவர் வேலைக்கு சென்றதுமே, தேவா என் வீட்டிற்கு வந்து செல்வார். இதனால், வீட்டு பக்கத்திலேயே சிசிடிவி கேமராவை பொருத்தி எங்களை ராஜ் கண்காணித்து வந்தார்.

    அதனால் நானும் தேவாவும் வெளியே சந்தித்தோம்.. என் கணவர் காவல்துறையில் உள்ளதால், எங்களை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்.. இதனால் என் பிள்ளைகள் முன்பே, ராஜ் என்னை அசிங்கமாக பேசி திட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை தந்தது.. அதனால்தான், நானும் தேவாவும் சேர்ந்து, ராஜை கொல்ல முடிவெடுத்தோம்..

    Advertisement

    சாப்பாட்டில் தூக்கமாத்திரை

    "சாப்பாட்டில் தூக்கமாத்திரை தந்து தூங்க வைத்து, பிறகு பெட்ரோல் ஏற்றி எரித்து விடுவோம், ஏற்கனவே போக்சோ வழக்கு இருப்பதால் அந்த மனஉளைச்சலில் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் சொல்லிவிடலாம்" என்று தேவா ஐடியா தந்தார்.. அத்துடன் தூக்க மாத்திரையும் வாங்கி தந்தார்.

    சனிக்கிழமை, அந்த தூக்க மாத்திரையை சாப்பாட்டில் கலந்து ராஜிக்கு கொடுத்தேன். அவரும் சாப்பிட்டு தூங்க சென்றார்... தேவாவுக்கு போன் செய்து சாப்பாட்டில் தூக்க மாத்திரை தந்துவிட்டதாக தகவல் சொன்னேன்.. அதன்பிறகு தேவா என் வீட்டுக்கு கிளம்பி வந்தார்..

    அப்பா ரூமில் புகை வருகிறதே

    நாங்கள் இருவரும் ராஜ் படுக்கையறைக்கு சென்று, அவரது கழுத்தை கைரேகை தெரியாதப்படி துணியால் நெரித்தோம்.. பிறகு ராஜ் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொன்றோம். பிறகு தேவா அங்கிருந்து பைக்கில் சென்றுவிட்டார். நானும் மேல் மாடியில் குழந்தைகள் இருந்த ரூமுக்கு சென்று விட்டேன்..

    சிறிது நேரம் கழித்து குழந்தைகளிடம், "அப்பா ரூமில் புகை வருகிறதே" என்று அலறியபடி ஓடிவந்தேன்.. ராஜ் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். அதை குழந்தைகளும, அக்கம்பக்கத்தினரும் பார்த்தனர்.. உடனே நான், என் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அழுது ஒப்பாரி வைத்தேன்.. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாட்டிக் கொண்டேன்" என்றெல்லாம் வாக்குமூலம் தந்துள்ளார்..!!

    English Summary

    Chennai SI Raj Murder.. Wife Mixed Sleeping Pills in Food? “Smoke Is Coming From Dad’s Room”