சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய கணவருக்கு, வீட்டிற்கு வந்ததும் பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. தனது மனைவியுடன் இன்னொரு நபர் நெருக்கமாக இருந்ததை பார்த்ததால் கொதித்து போன அந்த நபர் உடனடியாக வீட்டை வெளியில் பூட்டி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளி வந்த படம் சுப்பிரமணியபுரம். இந்த படத்தில் ஊர் நட்டாமை கேரக்டரில் நடித்து இருக்கும் மொக்கசாமி என்பவர், இரவில் பெண் ஒருவரது வீட்டிற்கு யாரும் தெரியாமல் நுழைந்துவிடுவார். அந்த பெண்னிடம் நெருக்கமாக இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போது, வீட்டை வெளியில் வைத்து கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் பூட்டி விடுவார்கள்.
இது தெரிந்ததும் வீட்டில் கழிவு நீர் போவதற்காக இருக்கும் சிறிய பாதை வழியாக புகுந்து ஓட்டம் எடுப்பார். நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த சம்பவம் போலவே சென்னையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்கள் பார்க்கலாம். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 47 வயதுடையவர், சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், 43 வயது பெண்ணுக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் தனது மனைவி, அவரது உறவினரான தவெக கட்சியில் இருக்கும் பிரமுகருடன் கள்ளதொடர்பில் இருப்பதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்து இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அவர், தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் உள்ளே தனது மனைவியுடன், அரசியல் கட்சி பிரமுகர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கிடையே பெண்ணின் கணவர், தன்னை புகைப்படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தவெக பிரமுகர் ஓட்டம் பிடித்து ஆட்டோவில் ஏறினார். பின்னர் போலீசார் அவரை ஆட்டோவிலேயே காவல் நிலையம் அழைத்து சென்றனர். சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் இரவு காட்சி.. வெளியே நின்று மகன் சொன்ன வார்த்தை! சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்டேன்! சுப்பிரமணியபுரம் நடிகை ஓபன்