ஸ்டான்லி மருத்துவமனையின் குளறுபடி! பெண் சடலங்கள் மாறிய அவலம்! சுடுகாட்டில் இருந்து மீட்ட போலீஸ்!

  • சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட இறந்த இரு பெண்களின் சடலங்களும் மாற்றி கொடுக்கப்பட்டது தெரியவந்த நிலையில் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சடலத்தை தடுத்து நிறுத்திய போலீஸார் அதை பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் ஏடூரை அடுத்த கூலித் தொழிலாளி சுமனின் மகள் அனுஷ்கா, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தார். இவர் கல்லூரியில் சேர ஆயத்தமாகினார். இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் நடந்த பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    Advertisement

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் தகவலறிந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஆரம்பாக்கம் காவல் துறையினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அனுஷ்காவின் சடலம் இல்லாதது அதிர்ச்சி ஏற்பட்டது.

    பிணவறையில் இருந்த சடலம் எப்படி காணாமல் போகும் என உறவினர்களும் போலீஸாரும் குழம்பியிருந்த நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதே நாளில் மணலியில் தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினி என்ற பெண்ணின் சடலத்திற்கு பதிலாக அனுஷ்காவின் சடலத்தை மாற்றி கொடுத்தது தெரியவந்தது.

    Advertisement

    இதுகுறித்து தகவலறிந்த மணலி போலீஸார் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு சென்ற போது சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுடுகாட்டிற்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. உடனே சுடுகாட்டிற்கு செல்லப்பட்ட அனுஷ்காவின் சடலத்தை போலீஸார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி சடலம் மாறிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.

    இதையடுத்து உறவினர்களிடம் இருந்து அனுஷ்காவின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவரது பெற்றோரிடம் அனுஷ்காவின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரியதர்ஷினியின் சடலமும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. டோக்கன் எண்கள் மாறியதால் சடலங்கள் மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு அலட்சியமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    Advertisement

    இதே போல் கடந்த ஆண்டு திருத்தணியை அடுத்த புஜ்ஜிரெட்டிபள்ளியைச் சேர்ந்த ராஜேந்திரந் வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார்.

    அது போல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் மாஞ்சி என்பவர் உடல்நல பாதிப்பால் மரணமடைந்த நிலையில் இவரது சடலத்திற்கு பதிலாக ராஜேந்திரனின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் மாஞ்சியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருவரது சடலங்களும் சரியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai Stanley government hospital gives mix up corpse to the different family shock incident. Before cremation right corpse handeedover to the right family.