சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து.. புறநகர் ரயில் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி

  • சென்னை: சென்னையில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால் தாம்பரம்- கடற்கரை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    Advertisement

    சென்னையை பொறுத்தவரை மிக முக்கியமான பொது போக்குவரத்தாக புறநகர் ரயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பல ஆயிரக்கணக்காணோர் புறநகர் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்கள் உச்சக்கட்ட கூட்டமாக இருக்கும்.

    Advertisement

    இதற்கிடையே சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் தடம் புரண்டதால் தாம்பரம் - கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதேநேரம் புறநகர் ரயில் திடீரென தடம் புரள என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English Summary

    A suburban electric train derailed at Chennai Fort Railway Station(சென்னை புறநகர் ரயில் விபத்து): Train services between Tambaram and Beach halts as Chennai Suburban Train Derails.