பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!

  • சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீஸார் சோதனையிட்டபோது, தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதுகுறித்து ஆக்ரா போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சிவப்பு நிற சூட்கேஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்ததும், பின்னர் அந்த சூட்கேஸ் இல்லாமல் இருவரும் அங்கிருந்து வெளியேறியதும் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில் மூலம் கூடுவாஞ்சேரி பகுதிக்குச் சென்றதும், அங்கிருந்து ஆட்டோவில் வேறு பகுதிக்குச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

    Advertisement

    சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த பிற தடயங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த இளைஞரும் இளம்பெண்ணும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸாரும், தமிழ்நாடு ரயில்வே போலீஸாரும் இணைந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் பெண்ணின் உடல் பாகங்கள் மற்றும் எலும்பு ஆகியவற்றை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி டபராவில் போட்டு வேகவைத்து விட்டு சென்று விட்டார்கள். தற்பொழுது அந்த டபராவை போலீசார் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த தலை 45 வயது பெண்ணுடையது என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    45 வயது பெண்ணுக்கும், சிசிடிவி காட்சிகளில் பதிவான 26 வயது இளைஞருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாகவும், அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளுமாறு 45 வயது பெண் வற்புறுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 26 வயது இளைஞர், தனது காதலியுடன் சேர்ந்து 45 வயது பெண்ணை தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    கொலைக்குப் பிறகு பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டில் இருந்த அண்டாவில் சில உடல் பாகங்களை மறைத்து வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் சில உடல் பாகங்களை மட்டும் சிவப்பு நிற சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸை புறநகர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி ஆக்ராவுக்கு அனுப்பியதாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Advertisement

    கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சிதைந்த உடல் பாகங்கள் ஆக்ராவில் மீட்கப்பட்ட உடல் பாகங்களுடன் தொடர்புடையதா என்பதையும் தடயவியல் பரிசோதனைகள் மூலம் போலீஸார் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை தவறான உறவு காரணமாக நடைபெற்றதா? அல்லது 45 வயது பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கொலை செய்யப்பட்ட 45 வயது பெண் யார், 26 வயது இளைஞர் யார், அவருடன் இருந்த இளம்பெண் யார், மூவருக்கும் இடையேயான தொடர்பு என்ன, கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரி வீட்டில் 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ரயில்வே போலீஸாரும், கூடுவாஞ்சேரி போலீஸாரும் இணைந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Guduvanchery police recover a 45-year-old woman’s head in the Chennai suitcase murder case, uncovering a shocking murder investigation.