தாம்பரம் ஸ்டன் ஆயிடுச்சு! மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும்.. ஐடி ஊழியர் செய்யுற வேலையா இது?

  • சென்னை: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர் ஒருவர், இளம் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் அந்த ஊழியர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்? எப்படி கைதானார் என்பதை விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றில், புவனேஷ்வரி (24) எனும் இளம்பெண் வேலை செய்து வருகிறார். அடிப்படையில் ரொம்பவும் சாதுவான மனம் கொண்ட இவர், தீபாவளி போனஸில்.. ஸ்வீட் பாக்ஸ்களை அதிக அளவில் வாங்கி வந்திருக்கிறார்.

    Advertisement

    வரும் வழியில் தாம்பரம் சானடோரியம் நடை மேம்பாலத்தில்.. யாசகம் பெற்று வந்த முதியவர்களுக்கு இவர் ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்திருக்கிறார். உலகமே தீபாவளியை கொண்டாடும்போது.. ஒதுக்கி வைக்கப்பட்ட இவர்கள் மட்டும் கொண்டாடக்கூடாதா என்ன? பண்டிகைகள் எல்லோருக்கும் பொதுவானதுதானே!! என்கிற எண்ணத்தில் புவனேஷ்வரி ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்திருக்கிறார். இப்படியான அற்புதமான தருணத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது.

    ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில்.. புவனேஷ்வரி கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்து.. கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடுங்க முயன்றிருக்கிறார். நல்லது செய்ததற்கு இப்படி ஒரு தண்டனையா?

    Advertisement

    இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத புவனேஷ்வரி.. நிலைமையை உணர்ந்துக்கொண்டு, கத்தி கூச்சலிட.. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து.. அந்த நபரை அடித்து துவைத்தெடுத்திருக்கிறார்கள். பின்னர் போலீசார் வந்து.. அந்த நபரை மீட்டு சென்றிருக்கின்றனர்.

    அவர்கள் நடத்திய விசாரணையில் வெளி வந்த தகவல்கள்தான் பெரிய ட்விஸ்ட்.. அதாவது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குபவர் என்று தெரிய வந்திருக்கிறது. ஓஎம்ஆர் பகுதியில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் இவர் ப்ராஜெக்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் பெயர் குப்புசாமி (46). இவருக்கு கிடைக்கும் சம்பளம் இருந்தாலே போதுமே.. வாழ்க்கையை ராஜா மாதிரி வாழலாமே!

    Advertisement

    கரெக்டுதான்.. ஆனால் குப்புசாமி இருப்பதை வைத்து சந்தோஷப்படும் ஆள் கிடையாது. பறப்பதற்கு ஆசைப்படும் நபர்! எனவே அளவுக்கு மீறி ஷேர் மார்க்கெட்டில் பணத்தை கொட்டியிருக்கிறார். இது மொத்தமாக வாரிக்கொண்டு போய்விட்டது. இதை சமாளிக்க கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை சமாளிக்க இன்னொரு கடன்.. இப்படி சுற்றி கடனாக வாங்கி தள்ளியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் கழுத்தை நெறிக்க.. வேறு வழியில்லாமல் பம்மல் பகுதியில் இருந்த அவரது வீட்டை ரூ.60 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்.

    எல்லாமும் கையை விட்டு போயும் கூட.. இன்னமும் கடன் மட்டும் குறையவில்லை. கடன் கழுத்தை நெறிக்க தொடங்கியது. இவ்வளவு சம்பாதித்தும் நிம்மதி இல்லையே என்று யோசித்த குப்புசாமி.. உடனடியாக செயின் பறிப்பு பிளானில் இறங்கினார். ஆனால், ஈஸியாக சிக்கிவிட்டார். கை நிறைய சம்பாதிக்கும் ஐடி ஊழியரே இப்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Topics: #it #crime #police

    English Summary

    Chennai techie: An IT employee earning a monthly salary of Rs. 1 lakh has caused a major shock by attempting to snatch a gold chain from a young woman. Let us look in detail at why this employee resorted to chain-snatching and how he was arrested.