தமிழ்நாட்டின் எதிர்காலமே மாறும்! விஜய் அறிவித்த சென்னை - கோவை, சென்னை- தூத்துக்குடி விரைவுச்சாலை

  • சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி, தொழிற்சாலைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சென்னை - கோவை மற்றும் சென்னை - தூத்துக்குடி இடையேயான அதிவிரைவு சாலைகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

    Advertisement

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு அறிவிப்புகள் நேற்று சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு இலக்கு வைத்துள்ள 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவை நனவாக்குவதில் இந்த இரு விரைவுச்சாலைகளும் மிக முக்கியமான முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன.

    Advertisement

    சென்னை - கோவை விரைவுச்சாலை

    தலைநகரான சென்னையை மாநிலத்தின் உற்பத்தி மற்றும் பொறியியல் மையமான கோயம்புத்தூருடன் அதிவிரைவாக இணைப்பதே இந்த வழித்தடத்தின் முதன்மை நோக்கம்.

    தற்போது சென்னை - கோவை இடையேயான பயணம் (NH 48 / NH 544 வழித்தடம்) கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன பயன்பட்டால் சராசரியாக 8 முதல் 10 மணி நேரம் வரை இழுக்கிறது. புதிய Access-Controlled விரைவுச்சாலை முழுமை பெறும்போது, இந்த பயண நேரம் வெறும் 5 முதல் 6 மணி நேரமாகக் குறையும்.

    இந்த வழித்தடம் ஸ்ரீபெரும்புதூர், வேலூர், தருமபுரி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய முக்கிய தொழில் மண்டலங்களை நேரடியாக இணைக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அமைந்துள்ள டெக்ஸ்டைல், வாகன உதிரிபாகங்கள் மற்றும் ராணுவ தொழிற்சாலைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமையும். சரக்குகளை விரைவாகக் கொண்டு சேர்ப்பதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சரக்கு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாகக் குறையும்.

    Advertisement

    சென்னை - தூத்துக்குடி விரைவுச்சாலை

    வட தமிழகத்தின் சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை, தென் தமிழகத்தின் வி.ஓ.சிதம்பரனார் சர்வதேச துறைமுகத்துடன் அதிவேகமாக இணைக்கும் வகையிலான கடலோர வழித்தடமாக இது வடிவமைக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் வழியாகத் தூத்துக்குடியைச் சென்றடையும் இந்த விரைவுச்சாலை, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். தலைநகரைச் சுற்றியே தொழிற்துறைகள் குவிந்து கிடக்கும் நிலையை மாற்றி, தென் மாவட்டங்களை நோக்கி புதிய தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த இணைப்பு வழிவகுக்கும். சென்னை துறைமுகம் - தூத்துக்குடி துறைமுகம் ஆகிய இரண்டு துறைமுகங்களை இது இணையும்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் தற்போது பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மையமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த அதிவிரைவுச் சாலை மூலம் துறைமுகத்திற்கு சரக்குகள் விரைவாகக் கொண்டு செல்லப்படுவதோடு, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களின் விவசாய மற்றும் கடல்சார் ஏற்றுமதிகளுக்கான கோல்ட் செயின் போக்குவரத்துப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்துச் செலவு (தற்போது சுமார் 13-14 சதவீதமாக உள்ளது. உலகளாவிய சந்தையில் போட்டியிட இதை 8-9 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான இந்த பசுமை விரைவுச்சாலைகள், எரிபொருள் விரயத்தைக் குறைத்து ஏற்றுமதிப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கும்.

    Advertisement

    தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு முனைகளை தலைநகருடன் குறைந்த நேரத்தில் இணைக்கும் இந்த மெகா விரைவுச்சாலைத் திட்டங்கள், எதிர்காலப் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், தமிழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் புதிய வேகத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Chennai to Coimbatore & Tuticorin in Half the Time: How TN's New Mega Industrial Expressways