சென்னையிலிருந்து நினைத்து கூட பார்க்க முடியாத வேகத்தில் ரயில்.. கோவை வழியாக திருவனந்தபுரம் போகலாம்

  • சென்னை: சென்னையிலிருந்து கோவை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை இணைக்கும் அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் ஆரம்பக்கட்ட கள ஆய்வுகள் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கான பயண நேரம் கணிசமாக குறையும்.

    Advertisement

    இந்தியாவில் மிக முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. இருப்பினும், இந்திய ரயில்கள் அந்த காலத்திலேயே இருப்பதாகவும் தேவையான அதிவேக சேவைகள் கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டே இருந்தது.

    Advertisement

    அந்த புகார்களுக்கு தீர்வாக பல்வேறு புதிய அதிவேக ரயில் சேவைகளை இந்தியன் ரயில்வே தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக வந்தே பாரத், அடுத்து வந்தே பாரத் ஸ்லீப்பர் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தன. வந்தே பாரத்தில் டிக்கெட் விலை அதிகம் என்றாலும் சவுகரியமாகவும் வேகமாகவும் செல்ல முடியும் என்பதால் பலரும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.

    அடுத்தகட்டமாக புல்லட் ரயில்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக பல்வேறு ரூட்களிலும் அதிவேக ரயில் பாதை அமைக்க முதற்கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே பெங்களூர்- சென்னை- ஹைதராபாத் ரூட் பரிசீலனையில் உள்ளது.

    Advertisement
    சென்னைக்கு புல்லட் ரயில்! கனவு நிஜமாகுது! ஒப்புதல் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி!

    இதற்கிடையே அடுத்தகட்டமாகச் சென்னையிலிருந்து கோவை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை இணைக்கும் அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல 13 முதல் 16 மணி நேரம் ஆகிறது. இந்த ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்தால் அது கணிசமாக குறையும்.

    இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை- தொழில் நகர் கோவை- கேரள தலைநகர் திருவனந்தபுரம் அதிவேக வழித்தடம் மூலம் இணைக்க முடியும். இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படுவதுடன், பயண நேரம் குறையும். தற்போது இந்த வழித்தடத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வழித்தடம், தொழில்நுட்ப சாத்தியங்கள், கட்டுமான தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாகப் பரிசீலிக்கப்படும்.

    Advertisement

    அதேநேரம் இந்த ரூட்டில் அதிவேக ரயில்கள் ஓட பல ஆண்டுகள் ஆகும். இந்த திட்டம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி, திட்ட செலவு, பயண நேரம் மற்றும் வழித்தடம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    English Summary

    Preliminary field surveys and feasibility studies have begun for a proposed high-speed rail corridor connecting Chennai, Coimbatore and Thiruvananthapuram(சென்னை திருவனந்தபுரம் புல்லட் ரயில்): Chennai to Thiruvananthapuram High-Speed Rail latest news in tamil.