பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா?

  • அதிக சம்பளம், அதிகப்படியான வேலைவாய்ப்பு மற்றும் அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது என்று பேசினாலே, ஐடி துறையின் மையமான பெங்களூரு அல்லது வர்த்தகத் தலைநகரான மும்பை பெயர்கள் தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும்.

    Advertisement

    ஆனால், 2026-27 நிதியாண்டில் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைக்கும் வகையில் காலம் காலமாக இருந்த பெங்களூர், மும்பை நகரங்களின் ஆதிக்கம் உடைத்தெறியப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி மனிதவள மேம்பாட்டு நிறுவனமான 'டீம்லீஸ்' (TeamLease) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் இந்தியாவின் மற்ற அனைத்து பெருநகரங்களை காட்டிலும், அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    Advertisement

    TeamLease நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள அறிக்கையின்படி, 2027 நிதியாண்டில் சென்னையில் சராசரி சம்பள உயர்வு 9.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. TeamLease நிறுவனம் இந்த அறிக்கையை சுமார் 23 துறைகள் மற்றும் 20 நகரங்களில் இருந்து 1,268 நிறுவனங்களின் பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் ஒட்டுமொத்த சம்பள உயர்வு 8.6 சதவீதம் முதல் 10.2 சதவீதம் வரை இருக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கடுமையாக உழைந்து நிறுவனத்திற்கு தேவையான இலக்கை அடைய ஊழியர்கள் உதவி செய்தால் நாட்டிலேயே அதிக சம்பள உயர்வை சென்னை ஊழியர்கள் பெறலாம்.

    Advertisement

    2027 நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. புனே மற்றும் ஹைதராபாத் இரண்டும் 9.6 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. அகமதாபாத் மற்றும் விசாகப்பட்டினம் 9.5 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. நாக்பூர் 9.4 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு நகரங்களுக்கு பரவி வருவதை காட்டுகிறது.

    சென்னை, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களில் சம்பள உயர்வு அதிகரிப்பதற்கு உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு, எலக்ட்ரிக் வாகனத் துறை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட முதலீடுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    Advertisement

    குறிப்பாக சென்னை ஆட்டோமொபைல் உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி மற்றும் எலக்ட்ரிக் வாகன முதலீடுகளில் பெரும் பகுதியை பெற்றுள்ளது.

    English Summary

    According to TeamLease’s latest Jobs and Salaries Primer, Chennai is projected to record the highest average salary increment of 9.7% in FY27, surpassing traditional hubs like Bengaluru and Mumbai. The report, based on responses from over 1,200 companies across 23 sectors, attributes this growth to strong investments in manufacturing, electric vehicles, infrastructure, and healthcare across tier-2 and tier-3 cities.