டிராபிக் இல்லை.. ஹாரன் சத்தம் இல்லை.. மொத்தமாக வெறிச்சோடிய சென்னை! தீபாவளியால் இப்படியொரு மாற்றம்!

  • சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தலைநகர் சென்னை வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கியமான சாலைகளிலும் கூட ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்கின்றனர்.

    Advertisement

    இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். சாதி, மத பேதம் எதுவும் இல்லாமல் உற்சாகத்தோடு கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இந்தாண்டு இன்று நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    Advertisement

    சொந்த ஊர்

    வழக்கமாக தீபாவளி நாளில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்தாண்டும் கூட சென்னைவாசிகள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடந்த சில நாட்களாகவே ஜிஎஸ்டி சாலை, திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் டிராபிக் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சிறப்பு பேருந்துகள்

    சிறப்பு பேருந்துகள் மூலம் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். பேருந்துகளை பொறுத்தவரை தவெக ஆட்சி அமைந்தது விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சில குளறுபடிகள் இருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.. ஆனால், இந்த முறை குளறுபடி இல்லை. பக்காவாக திட்டமிட்டு, 5 இடங்களில் இருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமில்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்.

    Advertisement

    அதேபோல சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதிலும் பல ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர் கிளம்பினர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பலரும் தீபாவளிக்கு சொந்த ஊர் கிளம்பினர். இதனால் கடந்த சில நாட்களாகவே ரயில் நிலையங்களில் மோசமான கூட்டம் இருந்தது. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    டிராபிக் இல்லை

    இப்படி பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுவாக காலை 9 முதல் 10 மணி வரை போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கும். அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

    Advertisement

    ஆனால், இந்த தீபாவளிக்கு நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் முக்கிய சாலைகளில்கூட போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. சில இடங்களில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்வதை பார்க்க முடிகிறது. காலை நேரத்திலேயே டிராபிக் நெரிசல் இல்லாமல் சாலைகள் காலியாக காட்சியளிப்பது சென்னைவாசிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்துள்ளது.

    தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பலரும் ஏற்கெனவே சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதன் காரணமாகவே நகரின் வழக்கமான பரபரப்பு குறைந்து, முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பண்டிகைக் காலத்தில் சென்னை இப்படியொரு அமைதியான தோற்றத்தில் இருப்பது இப்போது சென்னையில் இருப்போருக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

    Advertisement

    மழை

    ஒரு பக்கம் டிராபிக் நெரிசல் குறைந்துள்ள நிலையில், இன்னொரு புறம் மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றிரவு முதலே நகரில் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்தது. இரவு வரை கூட மழை தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது. டிராபிக் இல்லாத மழையுடன் சூப்பர் கிளைமேட் நிலவும் சென்னையை மக்கள் என்ஜாய் செய்கிறார்கள் என்றே சொல்லலாம்!

    English Summary

    Chennai has witnessed an unusual drop in traffic on Diwali as lakhs of residents travel to their hometowns(தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற சென்னைவாசிகள்): No Chennai Traffic as people headed down to hometowns.