ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த புறநகர் ரயில்.. சேத்துபட்டில் பதறிய பயணிகள்.. என்ன நடந்தது?

  • சென்னை: தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்த சென்னை புறநகர் ரயிலும், எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தை தவிர்க்க இரு ரயில்களும் எழும்பூர் - சேத்துபட்டு இடையே நிறுத்தப்பட்டதால் விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    Advertisement

    சென்னை மக்களின் போக்குவரத்திற்கு முக்கிய அங்கமாக இருப்பது புறநகர் ரயில்கள் தான். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு ரயில் என்று ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளிகள் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பெண்கள், வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் புறநகர் ரயிலை நம்பியே இருக்கின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் சென்னையில் திடீரென புறநகர் ரயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் பலரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்கையில் தாம்பரத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்த ரயிலும், எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்திருக்கின்றன.

    இரு ரயில்களும் நேருக்கு நேர் வந்தது பரபரப்பை அதிகரித்திருக்கிறது. அப்போது இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வருவது அறிந்து, உடனடியாக விபத்தை தவிர்க்கும் நோக்கில் இரு ரயில்களையும் நிறுத்தி இருக்கின்றனர். இந்த இரு ரயில்களும் எழும்பூர் - சேத்துபட்டு இடையே நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அப்போது பயணிகள் சேவையை உடனடியாக புறநகர் ரயில்களால் தொடங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதன்பின் பயணிகள் அனைவரையும் பாதி வழியிலேயே ரயில்வே நிர்வாகம் இறக்கிவிட்டிருக்கிறது. அப்போது பயணிகள் பாதுகாப்பின்றி ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்த இரு ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், மற்ற புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணமாக சொல்லப்படுகிறது. திடீரென புறநகர் இயங்காததால், பயணிகள் பலரும் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் ரயில்வே நிர்வாகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பயணிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    English Summary

    Chennai Train: Major Train Mishap Averted in Chennai as Suburban Trains Face Each Other on Single Track Near Chetpet