சென்னை: சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட சென்னை - திருச்சி அதிவேக விரைவுச்சாலை மதுரை வரை நீட்டிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026 நிகழ்வில் பங்கேற்ற NHAI மண்டல அதிகாரி இந்த முக்கியத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக வாகன ஓட்டிகளுக்கும், தொழில் துறையினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னை முதல் திருச்சி வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் தினமும் 1.6 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயண நேரமும் கணிசமாக அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வாக, வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தடையின்றிச் செல்லும் வகையில் கிரீன்ஃபீல்ட் முறையில் சென்னை - திருச்சி இடையே புதிய விரைவுச்சாலை அமைக்க NHAI திட்டமிட்டிருந்தது. தற்போது இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, திருச்சியோடு நிறுத்தாமல் தென் தமிழகத்தின் மையப் பகுதியான மதுரை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையில் குறிப்பிட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மட்டுமே இருக்கும். இதனால் சாலைகளில் இருந்து வாகனங்கள் சட்டென்று உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்படும். சென்னை முதல் மதுரை வரையிலான தற்போதைய பயண நேரம் 8 முதல் 9 மணி நேரமாக உள்ளது. புதிய எக்ஸ்பிரஸ்வே முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது, இந்த பயண நேரம் வெறும் 4.5 முதல் 5 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்ய என்னூர், காட்டுப்பள்ளி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்ல இந்தச் சாலை மிக முக்கிய வழித்தடமாக அமையும். திருச்சி மற்றும் மதுரை ஆகிய இரண்டு முக்கிய இரண்டாம் நிலை நகரங்களும் இந்த அதிவேகச் சாலையால் நேரடியாக இணைக்கப்படுவதன் மூலம், தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் பெருமளவில் அதிகரிக்கும். சென்னை - செங்கல்பட்டு தொழில் மண்டலங்கள், திருச்சியின் உற்பத்தி மையங்கள், மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜவுளி, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் இந்த விரைவுச்சாலையின் மூலம் மிக வேகமானப் போக்குவரத்து இணைப்பைப் பெறும். இது தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்குப் பெரும் பக்கபலமாக அமையும். இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மற்றும் புதிய வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பிலான முதற்கட்ட ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் இறுதி ஒப்புதல்கள் பெறப்பட்ட பிறகு, கட்டுமானப் பணிகள் முறைப்படி தொடங்கும் என NHAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை - திருச்சி - மதுரை விரைவுச்சாலையானது, தமிழ்நாட்டின் வட பகுதியையும் தெற்குப் பகுதியையும் இணைக்கும் அசத்தலான பாதையாக உருவெடுக்கவுள்ளது.என்ன திட்டம்? ஏன் இந்த விரிவாக்கம்?
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
முழுமையான Access-Controlled Corridor)
பயண நேரத்தில் பெரும் குறைவு
சரக்குச் போக்குவரத்து மேம்பாடு
தென் தமிழகப் பொருளாதாரத்தில் சாதனை
அடுத்தகட்ட நடவடிக்கைகள்