61 வயசு பாட்டின்னு கூட யோசிக்கலயே.. வேளச்சேரி பூங்காவில் சுற்றி வளைத்த காம கொடூரர்கள்! அலறிய சென்னை

  • சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சூழ்நிலையில் தான் தலைநகர் சென்னையில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தேறி உள்ளது.. 61 வயது பாட்டி என்றுகூட பார்க்காமல், இப்படியொரு அநியாயத்தை அந்த கொடூரர்கள் செய்துள்ளனர்.

    Advertisement

    சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் இருக்கும் எச்.பி பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பூங்கா அமைந்துள்ளது.. இந்த பகுதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஒருவர் வழக்கம்போல அந்த பூங்காவில் வாக்கிங் செல்வதற்காக சென்றுள்ளார்.

    Advertisement

    வேளச்சேரி பூங்கா கொடுமை

    அந்த நேரத்தில் அந்த பக்கமாக 5 பேர் கொண்ட கும்பல் நடந்து சென்றுள்ளது.. அவர்கள் 5 பேருமே இளைஞர்கள் ஆவர்.. அவர்கள் அனைவருமே போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த போதை கும்பல் தனியாக இருந்த அந்த மூதாட்டியை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இந்த கொடூர தாக்குதலால் அந்த மூதாட்டி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து கூச்சலிட்டு அலறியுள்ளார்.. அடுதத சில நிமிடங்களில் அவர் மயங்கியும் அங்கேயே விழுந்துள்ளார்..

    அலறி விழுந்த பாட்டி

    அந்த பாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு பூங்காவிற்கு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.. அப்போது அங்கே மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கொடூரமான காயங்களுடன் மயங்கி கிடந்ததை பார்த்து மக்கள் பதறிப்போயுள்ளனர்.. ரத்தம் சொட்ட சொட்ட இருந்த அந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக உடனடி மருத்துவ உதவிக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

    இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணையை தொடங்கினர்..

    Advertisement

    இதற்கிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதால் சென்னை மாநகர காவல்துறையே இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது..

    காவல்துறை விளக்கம்

    காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேளச்சேரி பகுதியில் வயதான பெண்மணியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை தொடங்கப்பட்டது.. வழக்கு பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள் அறிவியல் ஆதாரங்களுடன் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம்.. முக்கியமான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தேவையான உடனடி மருத்துவ மற்றும் மனநல உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வேளச்சேரி வழக்கின் தொடர் விசாரணையை மிகவும் விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர சென்னை போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை சிறுமி, வேளச்சேரி பாட்டி

    இதில் 2 பேர் கைதானாலும்கூட, இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் சென்னையை விட்டு நீங்கவில்லை.. தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடி படையை உருவாக்கினார்..

    இந்த படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.

    Advertisement

    இப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும் கோவை சூலூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், அடுத்து இப்போது வேளச்சேரி பாட்டிக்கு நடந்த சம்பவம் என வரிசையாக நடந்து எல்லாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது..!!!

    English Summary

    சென்னை வேளச்சேரியில் நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை காவல்துறை, அறிவியல் ஆதாரங்கள் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. தப்பியோடிய 3 இளைஞர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.