சென்னையில் நேற்று பெய்தது மேகவெடிப்பு இல்லையாம்! அப்படியென்றால் அது என்ன மாதிரியான மழை?

  • சென்னை: சென்னையில் நேற்று 36 செ.மீ. மழை கொட்டித் தீர்த்த நிலையில் அது மேகவெடிப்பு இல்லை என்றும், மேகவெடிப்புக்கும் தொடர் மழைப் பொழிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

    Advertisement

    இதுகுறித்து Chennai - Weather எனும் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று மாலை அல்லது இரவு சென்னையில் பெய்தது மேகவெடிப்பு மழை அல்ல. ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய மேகங்கள் மீண்டும் மீண்டும் உருவாகி 4 அல்லது 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பெய்த தொடர் மழையாகும்.

    Advertisement

    மேக வெடிப்பு

    மேக வெடிப்பு மழை என்றால் மிகத் தீவிரமான, அதே வேளையில் குறைந்த நேரத்தில் மழை பெய்யும். வழக்கமாக ஒரே ஒரு மிக உயரமான, மேகத்தில் இருந்து மேகவெடிப்பு உருவாகும். சிறிய பகுதியில் மட்டுமே மழை வெளுக்கும்.

    குறுகிய காலத்தில் அதாவது 1 முதல் 2 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையைதான் மேக வெடிப்பு என்போம்.

    தொடர் மழை

    ஆனால் நேற்று பெய்தது தொடர் மழை, இதை ஆங்கிலத்தில் Persistent Rainfall என்போம். தொடர் மழை என நேற்று பெய்த மழையை ஏன் வகைப்படுத்துகிறோம் என்றால் ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் உருவாகும் இடியுடன் கூடிய மழை மேகங்கள் உருவாகும்.

    Advertisement

    மேகங்கள் உருவாக்கம்

    குறிப்பிட்ட ஒரே பகுதிக்கு மேல் தொடர்ந்து மேகங்கள் உருவாகி நகர்ந்து கொண்டே இருக்கும். 4 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும், நீண்ட நேரத்திற்கு சீரான தொடர் மழையைத் தரும். இதைதான் தொடர் மழை என்கிறோம்.

    மேகவெடிப்பு அல்ல

    எனவே நேற்றைய தினம் பெய்தது மேகவெடிப்பு அல்ல, ஒரே பகுதியில் நீண்ட நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை மேகங்கள் தொடர்ச்சியாக உருவானதாலேயே அதிக மழை பெய்தது. இவ்வாறு அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினமும், இன்றும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Advertisement

    எதிர்பார்த்ததை விட அதிகம்

    ஆனால் வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட நேற்று அதிக மழை பெய்தது. சென்னையில் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை சிறிது நேரம் விட்டிருந்தது. பின்னர் இரவு பெய்யத் தொடங்கி அதிகாலை வரை விடாமல் அடை மழை பெய்தது. நடுநடுவே இடி, மின்னல் மிரட்டியது.

    வானிலை மையம் அலர்ட்

    சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில்தான் கனமழை வெளுத்தது. முன்னதாக இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    Advertisement

    வளிமண்டல மேலடுக்கு

    சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இன்றும் மழை

    இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் அதி கனமழை பதிவாகியுள்ளது. இன்றைய தினமும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது.

    அதிக மழை எங்கு?

    சென்னை கத்திவாக்கம், பாரிமுனை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்தது. சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 34 செ.மீ. மழையும் பாரிமுனையில் 30 செ.மீ. மழையும் திருவொற்றியூரில் 20 செ.மீ. மழையு் பெய்துள்ளது.

    English Summary

    Chennai Weather Raja says that yesterday's rain in Chennai was not cloud burst, its persistent rainfall. He explained what Is the difference?