மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்!

  • சென்னை: மூணாறு அருகே கொழுக்குமலையில் இருந்து குதித்த சென்னை இளைஞர் பலியான சம்பவம் அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக கேரள எல்லையில் மூணாறு அருகே கொழுக்குமலைக்கு தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஏற்காடு உள்ளிட்ட தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில் கொழுக்குமலையில் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரு பாயிண்ட்டில் அமர்ந்து அந்த காட்சியை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட காட்சிகளும் அவர்களது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் விழுந்த இடம் 400 அடி பள்ளம் என்பதாலும் அது ஒரு அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டிக் கொண்டு இறங்கி, அந்த இளைஞரின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எதற்காக கீழே குதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக
    சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-2464000
    மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104
    ஐகால் உதவி எண்: 022-25521111
    ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

    English Summary

    A tragic incident near Kolukkumalai, close to Munnar, has left tourists in shock after a young man from Chennai reportedly died after jumping from a high point in the area. The incident has raised concerns about tourist safety at one of the region’s popular hill destinations.