சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக தவெக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தது. ஆனால் தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சரியாகவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் கஞ்சா விற்பனையில் நடந்த போட்டி காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். வயது 28. இவர் தன்னுடைய வீட்டு வாசிலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அஜித்தை தாக்கியுள்ளனர். கொடூரமான ஆயுதங்களால் தாக்கி சென்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு அஜித்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 இளைஞர்கள் இணைந்து அஜித்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்துள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய வாகனம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் என்பவரை தேடி வருகிறோம். பின்னணியில் உள்ள மற்றவர்கள் குறித்தும் விசாரிக்கிறோம். அஜித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.கஞ்சா விற்பனையில் நடந்த கொடூரம்