அதிசயிக்கத்தக்க நீர் நிலைகள் + திருவள்ளூரின் நெற்களஞ்சியத்தை அழிக்கப்போகிறாரா விஜய்? புது பிரச்சனை!

  • சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இப்போது விமான நிலையத்திற்கு புதிய இடத்தை அரசு தேடி வருகிறது. செங்கல்பட்டின் செய்யூர் மற்றும் திருவள்ளூரின் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்கள் புதிய விமான நிலையத்திற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இது பரந்தூரை விட அதிக சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட இடம் என்று சூழலியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    செய்யூரில் அதிசயிக்கத்தக்க நீர் நிலைகளும், கும்மிடிப்பூண்டியில் நெற்களஞ்சியமும் இருப்பதால், இந்த இடங்களில் விமான நிலையம் அமைத்தால்.. சூழலியல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்ற சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதிசயிக்கத்தக்க நீர் நிலைகள்

    செய்யூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியை சுற்றி செய்யூர் ஏரி, ஒதியூர் ஏரி போன்ற பிரம்மாண்டமான நீர் நிலைகள் இருக்கின்றன. மட்டுமல்லாது இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிக மிக அதிகம். எந்த அளவுக்கு எனில்.. இங்குள்ள கிணறுகளை வைத்து ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்ய முடியும். இப்பகுதியில் உள்ள மணற்பாங்கான மற்றும் களிமண் கலந்த வண்டல் மண்.. நெல், நிலக்கடலை, உளுந்து மற்றும் கரும்பு விளைச்சலுக்கு உகந்தது.

    விஜய் யோசனை சரியா?

    கடல் பக்கத்தில் இருப்பதால், இங்குள்ள ஏரிகளில் நிலத்தடி நீரும் நல்ல தண்ணீராக இருப்பதால், பிரத்யேகமான கடலோர விவசாய முறைகள் மூலம் தென்னை மற்றும் முந்திரி தோட்டங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் இது எல்லாத்தையும் அழிக்க வேண்டும். பரந்தூரில் விவசாய நிலத்தை அழிக்க கூடாது என்று.. விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த விஜய்.. இங்கு மட்டும் எப்படி புதிய விமான நிலையத்தை அமைப்பார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    கும்மிடிப்பூண்டி - திருவள்ளூரின் நெற்களஞ்சியம்

    செய்யூர்தான் இப்படி எனில், அதைவிட பெரிய சுற்றுச்சூழல் வரப்பிரசாதமாக கும்மிடிப்பூண்டி இருக்கிறது. சென்னைக்கு வடக்கே திருவள்ளூரில் உள்ள கும்மிடிபூண்டி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்று அறியப்பட்டாலும் அதன் உட்புற கிராமங்கள் தூய்மையான விவசாய பூமியாகும்.

    இப்பகுதிக்கு அருகில் ஆரணி ஆறு பாய்வதாலும், ஆரம்பாக்கம் ஏரி, கும்மிடிப்பூண்டி பெரிய ஏரி போன்ற நீர் நிலைகள் இருப்பதாலும் விவசாயம் முதன்மையான தொழிலாக இருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் நிலக்கடலை மற்றும் உளுந்து போன்ற பயிர்கள் நெல் அறுவடைக்கு பின் மாற்று பயிர்களாக அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

    Advertisement

    வரப்பிரசாதமாக அமைந்த இடம்

    ஆக இந்த இரண்டு பகுதியிலும் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனில், கடலோர சுற்றுச்சூழல், சதுப்பு நிலங்கள் மற்றும் பெரிய ஏரிகளை அழிக்க வேண்டும். அப்படி செய்தால் கடல் நீர் உள்ளே புகும் ஆபத்து ஏற்படும். அதேபோல செய்யூர் கடலுக்கு பக்கத்தில் இருக்கிறது. இங்கு பறவைகளின் நடமாட்டம் அதிகம். விமானங்களுக்கு இது ஆபத்தானது. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் எடுத்தோம் கவுத்தோம் என்று விமான நிலையத்தை அமைத்துவிட முடியாது என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Vijay govt: Amidst strong opposition to establishing an airport at Parandur, Chief Minister Vijay announced the cancellation of the project. The government is now scouting for a new location for the airport. Cheyyur in Chengalpattu and Gummidipoondi in Thiruvallur have been proposed as potential sites; however, environmentalists have pointed out that these areas are of greater ecological significance than Parandur.