நடுரோட்டில் காருக்குள் காதல் ஜோடி உல்லாசம்.. வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்த மக்கள்!

  • ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் விபத்தில் சிக்கிய காருக்குள் ஜோடி ஒன்று முத்தம் கொடுத்துக்கொண்டு நெருக்கமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருவரையும் காருக்குள் இருந்து வெளியே இழுத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் கடந்த வாரம் இரவு கார் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. காருக்குள் இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். காரை ஒரு இளைஞர் ஓட்ட அவருக்கு பக்கத்திலேயே இன்னொரு இளம்பெண் இருந்துள்ளார். அனைவருமே மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    நடைபாதையில் ஏறி நின்ற கார்

    அதி வேகத்தில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடைபாதையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கார் விபத்தில் சிக்கி நின்றதால், சத்தம் கேட்டு அப்பகுதியிலுள்ளவர்கள் ஓடி வந்தனர். காரில் வந்தவர்களுக்கு என்ன ஆனதோ.. ஏது ஆனதோ என்று பதறியபடி ஓடி வந்தனர்.

    முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்

    கார் டோரை திறந்ததும் அவர்களுக்கு அதிர்ச்சியே கிடைத்தது. காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த இளம்பெண்ணும் இளைஞரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முத்தம் கொடுத்துக்கொண்டு நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை பார்த்ததும் நடு ரோட்டில், அதுவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு இப்படி செய்கிறார்களே என்று கோபம் அடைந்த மக்கள், இருவரையும் பிடித்து வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்தனர்.

    Advertisement

    உடனடியாக போலீசருக்கும் தகவல் கிடைத்த நிலையில், போலீசிசார் விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு தரப்பிலும் புகார் அளிக்கப்படாததால், போலீசார் எச்சரித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், கோபத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி நடந்து கொள்ளும் நபர்களை எல்லாம் போலீசார் எளிதில் விடக்கூடாது. அவர்களுடைய லைசன்சை ரத்து செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்களோ, போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் சாலைகளில் இதுபோல பொதுமக்களுக்கு தொந்தரவான செய்கைகளில் ஈடுபட்டாலும் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அபராதம் மட்டும் போட்டுவிட்டு விட்டு விடக்கூடாது. கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இத்தகைய செயல்களுக்கு கடிவாளம் போட முடியும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

    English Summary

    An incident in Chhattisgarh, where a couple was found kissing and in an intimate position inside a car involved in an accident, sparked anger among local residents. Following this, the public dragged the pair out of the vehicle and gave them a sound thrashing. A video of the incident, which took place last week, is going viral on social media. Here are the details.