அது மட்டும் செஞ்சிடாதீங்க.. அவங்க பார்த்துட்டே இருக்காங்க! அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஆர்டர்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. இதனால் திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே விஜய் அரசை, உன்னிப்பாக கவனித்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் முதலமைச்சர் விஜய் அதிரடியாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து, தனது அமைச்சர்களுக்குப் பெரிய செக் வைத்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் கறாராக இருந்து வருகிறார்.

    Advertisement

    மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு அமைச்சர்களின் செயல்பாடுகள்தான் மிக முக்கியக் காரணம் என்பதையும் விஜய் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் போலும்..


    முதலமைச்சர் விஜய்

    குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அமைச்சர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் தாமதமின்றி மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறாராம்..

    அதுமட்டுமல்ல, பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரக்கூடாது என்றும் ஆரம்பத்திலேயே அலர்ட் செய்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.. அதனால்தான் அமைச்சர்கள் பலரும் இப்போது கொஞ்சம் சைலண்ட் மோடுக்கு மாறியிருக்கிறார்கள்.

    Advertisement

    திமுக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    அரசியல் விமர்சகர்களின் பார்வையில், இந்த நடவடிக்கை நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்கான ஒரு நல்ல ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த கண்டிப்பு, அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் பொறுப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்றும் தங்களின் செயல்பாடுகள் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது என்ற உணர்வு, அவர்களை இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும் என்றும் விமர்சகர்களும் கருத்து கூறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமான தடை உத்தரவு ஒன்றை அமைச்சர்களுக்குப் பிறப்பித்துள்ளாராம்.. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் யாரும் தினசரி செலவுகள் மற்றும் வழக்கமான கோப்புகளை தவிர, வேறு எந்தப் புதிய கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என்று ஸ்டிரிக்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

    Advertisement

    அமைச்சர்களுக்கு ஆர்டர்

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் பலர், இப்போது தவெக அரசையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அணுகி வருவதாக தெரிகிறது. அமைச்சர்கள் யாரும் அவர்களுக்கு தெரியாமல், அவசரப்பட்டு புதிய ஒப்பந்தங்களை வழங்கிவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.

    பழைய ஒப்பந்ததாரர்களுக்கு ஏதாவது புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டால், அது இந்த புதிய அரசுக்குத் தேவையற்ற பெருத்த தலைவலியை ஏற்படுத்தி விடுவதுடன், மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்துவிடும் என்பதால், இப்படியொரு தடை உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    Advertisement

    குதிரை பேர அரசியல்

    எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அரசியல் ஒருபுறம், நிர்வாகத்தை தூய்மையாக, பவர்ஃபுல்லான வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம் என முதலமைச்சர் விஜய் மிகவும் யோசித்து இந்த மூவ்களை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.. ஆக மொத்தம் விஜய் இப்போது எடுத்துள்ள இந்த அதிரடி உத்தரவுதான் முடிவு, தமிழக அரசியலின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. இது எத்தகையை ரிசல்ட்டை தரப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Chief Minister Vijay Issues a Stern Warning to Ministers: "They're Watching You"