நவம்பர் 3ல் ஈரோடு செல்லும் முதல்வர் விஜய்.. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பயணம்.. பின்னணி என்ன?

  • சென்னை: நவம்பர் 3ஆம் தேதி முதல்வர் விஜய் ஈரோடு மாவட்டம் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் பயணிக்கும் விஜய், கோவையில் இருந்து ஈரோட்டிற்கு சாலை மார்க்கமாக செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் அடுத்ததாக கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. இதனால் அடுத்தக் கட்டமாக இடைத்தேர்தல் பணிகளை தவெக தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு தவெக தயாராகி வருகிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த ஜெயக்குமார் தான் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. அமைச்சர் செங்கோட்டையனும் அதனை உறுதி செய்துள்ளார்.

    இந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி முதல்வர் விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் வரவிருக்கிறார். சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலமாக வரும் விஜய், அங்கிருந்து சாலைமார்க்கமாக ஈரோட்டிற்கு வருகிறார்.

    Advertisement

    முதல்வராக பொறுப்பேற்ற பின் திருச்சி, கரூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் விஜய் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த மாவட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் விஜய் ரோடு ஷோ செய்வது வழக்கம். இதனால் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு சாலை மார்க்கமாக செல்லும் போது விஜய் ரோடு ஷோ செல்வார் என்று கருதப்படுகிறது.

    விஜய்யின் பயணம் தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் முதல்வர் விஜய்யின் பயணம் தொடர்பாக அரசு தரப்பில் கடைசி நேரத்தில் தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் கடைசி நாட்களில் விஜய்யின் பயணம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chief Minister Vijay to Visit Erode on November 3 to Distribute Government Welfare Assistance