முதல்வர் விஜய் பிறந்த நாள்.. வண்டலூர் பூங்காவில் ஜூன் 21, 22-ல் அனுமதி இலவசம்.. அமைச்சர் விளக்கம்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21, 22-ல் வன உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் இன்றி அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை 2 நாட்கள் வன உயிரியல் பூங்காவினுள் நுழைவு கட்டணம் செலுத்தாமலே பார்வையிடலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதற்கு வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

    Advertisement

    வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி ஜூன் 21, 22-ல் சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை 2 நாட்கள் வன உயிரியல் பூங்காவினுள் நுழைவு கட்டணம் செலுத்தாமலே பார்வையிடலாம். 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். அதேநேரம் இந்த இரு நாட்களுக்கான நுழைவு கட்டணத்தை தவெக சார்பில் வனத்துறை அமைச்சரான நானும், எனது சகோதரர்களும் குடும்ப அறக்கடளையும் அரசுக்கு முழுமையாக செலுத்திவிடும். இரு நாட்களுக்கான நுழைவு கட்டண செலவு 70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் " என்று கூறினார்.

    Advertisement

    முன்னதாக திமுக ஐடி விங்க் வெளியிட்ட விமர்சனத்தில், "உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே?

    நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்?

    இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது?

    வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு?

    முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள்.

    Advertisement

    அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்?

    இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி இருந்தது.

    English Summary

    It has been announced that free entry will be granted to the zoological parks on June 21 and 22 to mark the birthday of Chief Minister Vijay. Free admission applies to the Vandalur Zoological Park in Chennai, the Amirthi Zoological Park in Vellore, and the Kurumbapatti Zoological Park in Salem. People of all ages—from children to adults—can visit these parks over these two days without paying an entrance fee.