நாளைக்கு விஜய் எப்படி பேசுவார்? சென்னையில் நடந்த கொடூரம்! சட்டசபையில் வெடிக்க இருக்கும் பஞ்சாயத்து!

  • சென்னை: சட்டம் ஒழுங்கு குறித்து நாளை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை கொடுக்க இருக்கிறார். இந்நிலையில் சென்னையில் தவெக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    நாளை நான் பேசும்போது யாரும் எழுந்து போய்விடக்கூடாது என்று விஜய் கூறியிருந்த நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விவாதங்களை கிளப்ப இருக்கின்றன.

    Advertisement

    17 ஆண்டு பகை

    சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் நேற்றிரவு அடையாறு அருகே உள்ள வண்ணாந்துறை பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல் கண்ணனை வெட்டி கொலை செய்திருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு அடையாறில் நடந்த சிவா என்பவரது கொலையில் கண்ணனுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இப்படி இருக்கையில் 17 ஆண்டு பகையை மனதில் வைத்துக்கொண்டு இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை சந்தேகம் தெரிவித்திருக்கிறது. கண்ணன் கொலையின் சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாகி, சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    Advertisement

    விஜய் என்ன பேசப்போகிறார்?

    நாளை சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளிக்கிறார். இந்த நேரத்தில் தலைநகரில், தவெக நிர்வாகி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தூண்டியிருக்கிறது. ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு விஷயத்தில் தவெக மீது ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன.

    இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் 'வெற்றி சட்டம்-ஒழுங்கு' நிலை!

    Advertisement

    தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

    நாளை முதல்வர் விஜய் பதிலளித்தாலும், எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு குறித்து இன்னும் தீவிரமான கேள்விகளை எழுப்ப இருக்கின்றன. இதனால், நாளைய தினம் சட்டமன்றம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: Scientists have discovered a new flower in the forests of Thailand. This flower has neither branches nor leaves. In fact, scientists were astonished to find that the plant itself is not even green.