Vijay Apology: அமைச்சருக்காக நான் ஸாரி கேட்டுக் கொள்கிறேன்! திமுகவிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!

  • சென்னை: "உங்கள் கட்சித் தலைவரின் பெயரை குறிப்பிட்டது தவறுதான். அமைச்சர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன்" என முதல்வர் விஜய் பேரவையில் தெரிவித்தார்.

    Advertisement

    சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கினார். அப்போது அவர் திமுகவினரை பார்த்து, "உங்கள் தலைவரின் பெயரை அமைச்சர் குறிப்பிட்டது தவறுதான், அமைச்சர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என விஜய் தெரிவித்தார்.

    Advertisement

    சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டசபையில் தொடங்கியது. அப்போது வருவாய் துறை மானியக் கோரிக்கை மீதான உரையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேசினார்.

    முன்னாள் முதல்வர்

    அவர் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் ஒருங்கே பெற்று எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

    தவெக வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. திமுகவின் வயது 75. ஒவ்வொரு வரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறைக்குச் சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்த கட்சி எங்களுடையது.

    Advertisement

    மனை பட்டா

    கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனை பட்டா வழங்கியுள்ளோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினோம்.

    4000 ரூபாய்

    நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா காலத்திலேயே 4000 ரூபாய் நிவாரணம் வழங்கினோம். தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ 4000 கிடைக்கும். சிலிண்டர் கிடைக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என பேசினார்.

    ரஞ்சித் குமார்

    அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித் குமார், ஆவேசமாக எழுந்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்தும், அதிமுக ஆட்சியில் பெரிதும் விமர்சனமாக முன் வைக்கப்பட்ட ஒரு பார்முலா குறித்தும் ஆவேசமாக பேசினார்.

    Advertisement

    பெயரை சொல்லிய அமைச்சர்

    அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை மறைந்த முன்னாள் முதல்வர் என சொல்லாமல் அப்படியே தலையில் அடித்தாற் போல் பெயரை சொல்லியதும் திமுகவினர் கொந்தளித்துவிட்டார்கள்.

    திமுக அமளி

    ஒரு மூத்த உறுப்பினர், அவர் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் ஆற்றிய தொண்டுகள் ஏராளமாக இருக்கும்போது இப்படித்தான் ஒரு முன்னாள் முதல்வரின் பெயரை சொல்வதா என திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

    சபாநாயகர் குறுக்கிட்டு

    முன்னாள் முதல்வரின் பெயரை ரஞ்சித் குமார் உச்சரித்ததும் சபாநாயகர் குறுக்கிட்டு, அவரது பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அமைச்சர் ரஞ்சித் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.

    Advertisement

    அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான செங்கோட்டையனும் , ரஞ்சித்குமாரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    கண்டனம்

    இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் எல்லாம், முன்னாள் முதல்வரின் பெயரை சொல்லிய போது ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தொடர்ந்து இனி அவையில் முன்னாள் அமைச்சர், முன்னாள் முதல்வர், மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு உறுப்பினர் என அழைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அப்படியிருக்கும் போது ஒரு அமைச்சர் இப்படி பேசியது சரியா என திமுக முன்னாள் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அப்போதெல்லாம் அமைச்சர் ரஞ்சித் எழுந்து பேச முற்பட்டார். ஆனால் அவரை சபாநாயகர் அமருமாறு தெரிவித்ததுடன் அவருக்கு மைக் கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டார்.

    சாரி கேட்ட முதல்வர்

    இதையடுத்து முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட எழுந்தார். அப்போது விஜய், உங்கள் கட்சித் தலைவரின் பெயரை குறிப்பிட்டது தவறுதான். அமைச்சர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன்" என திமுகவினரை பார்த்து தெரிவித்தார். இதை கே.என். நேரு வரவேற்றார்.

    English Summary

    CM Joseph Vijay apology for DMK as minister Ranjithkumar uses DMK leader Karunanidhi's name in assembly.