முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா நாட்டுல என்ன நடக்குதுனு தெரிஞ்சிருக்கும்! உதயநிதிக்கு விஜய் பதில்

  • சென்னை: விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டது என்றும் முன்னபின்ன பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும் என்றும் விஜய் தெரிவித்ததும் அதற்கு உதயநிதி சரியான பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும், மேகதாது அணை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருப்பதாவது: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதல்வர் நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட நிதியுதவி கோரியிருந்தார்.

    நீர் வளத் துறை அமைச்சரவையும் சந்தித்து மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார். கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பான பல்வேறு பணிகளை கர்நாடகா செய்து வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது.

    Advertisement

    இதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்?

    மேகதாது அணை குறித்து விவாதிக்க தவெக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பேசினார்.

    அப்போது பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பேச சபாநாயகர் அழைத்த போது, முதல்வர் விஜய் தானே பதில் அளிப்பதாக எழுந்தார்.

    Advertisement

    அப்போது விஜய் பேசுகையில், காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி சில விவரங்களை கேட்டுள்ளனர். காவிரி நம்முடைய உணர்வு ரீதியான ஒரு விஷயமாகும். அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை .

    மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்தே தீர்மானம் போட்டோம். அதை நேர்முக கடிதமாக பிரதமரிடம் கொடுத்துள்ளோம். இன்றைய காலத்தில் பகை நாடுகளே தண்ணீர் பிரச்சனையை பேசி தீர்க்கிறார்கள். நாம் ஏன் பக்கத்து மாநிலத்தோடு பேசி தீர்க்க கூடாது என்று நினைத்தேன்.

    அதற்காகவே கர்நாடகா போகலாம் என்று முயற்சி செய்ய நினைத்தேன். 1969ஆம் தேதி நீர்வளத் துறை அமைச்சராக இருந்தவர் அணை கட்ட ஏன் அனுமதித்தார் என கேட்டு dirty politics செய்ய நாங்கள் விரும்பவில்லை.

    Advertisement

    விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு நிவாரணம் ஏற்கெனவே கொடுத்தாகிவிட்டது. தினமும் பேப்பர் படித்திருந்தால்தானே நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும் என விஜய் கேட்டார்.

    இதற்கு உதயநிதி பதிலளிக்கையில், குறுவை சாகுபடி தொடர்பாக சிறப்பு தொகுப்பு வேறு, வறட்சி நிவாரணம்
    வேறு. நீங்கள் கொடுத்தது சிறப்பு தொகுப்பு; நாங்கள் விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம். தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் சொல்வதையும் கேட்கணும் என உதயநிதி கூறிவிட்டு அமர்ந்தார்.

    ஆனால் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டபோதும் அதற்கு முதல்வர் விஜய் சட்டசபையில் பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Joseph Vijay replies to Udhayanidhi that he should read newspaper daily.