என்னங்க சார் இது? சிஎம் ஆபிஸ் டெண்டரிலேயே குழப்பம்! இ-டெண்டரை பார்த்தவர்களுக்கு ஷாக்! என்னாச்சு?

  • சென்னை: சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்து முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்கான டெண்டர் விளம்பரம் நாளிதழ்களில் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் தான் முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியிட்டில் விதிமீறல் ஏற்பட்டு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

    Advertisement

    ஆங்கிலேயர் காலத்தில் சென்னை துறைமுகத்திற்கு அருகே செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அந்த கோட்டை வளாகம் சென்னை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    அதே வளாகத்தில் தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு க ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான முதல்வர்கள் அந்த அலுவலகத்தில் தான் பணியாற்றி வந்தனர்.

    தலைமைச் செயலகம்

    இந்த நிலையில் நிர்வாக வசதிகளுக்காக தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலகத்தை. நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற திட்டமிடப்பட்டது/ இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் புதிய முதல்வர் அறை, தனி செயலாளர்களுக்கான அலுவலகங்கள், ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    Advertisement

    டெண்டர்

    முதற்கட்டமாக இந்த பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு கடந்த மாதம் நாளிதழ்களில் வெளியானது. அதில், இடப் பாற்றாக்குறை காரணமாக முதல்வரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன், முதல்வரின் முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றப்படவுள்ளது.

    இ-டெண்டர்

    இந்தப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 10-வது தளத்தில் உள்ள பிளாக் - 1க்கு ரூ. 2.41 கோடியும், பிளாக் - 2க்கு ரூ. 2.01 கோடியும், பிளாக் - 3க்கு ரூ. 1.12 கோடியும் டெண்டர் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற செப். 1 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் டெண்டர் கோர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்" என கூறப்பட்டிருந்தது.

    Advertisement

    டெண்டர் முரண்பாடு

    இந்த நிலையில் தான் முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியிட்டில் விதிமீறல் ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியான நிலையில் ஆன்லைனில் 17ஆம் தேதி வெளியாகி உள்ளது. அதாவது நாளிதழ் டெண்டர் அறிவிப்புக்கும் இ-டெண்டர் அறிவிப்புக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதிப்பீட்டில் குழப்பம்

    பத்திரிகைகளில் டெண்டர் அறிவிப்பு வெளியான 4 நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் திட்ட மதிப்பீட்டில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கின்றனர். அதுவும் இ-டெண்டரில் திட்ட மதிப்பீடு குறித்த எந்த விவரங்களும் இல்லை என்கின்றனர். அதாவது 10வது தளத்தில் உள்ள பிளாக் 1க்கு 2.4 கோடி, பிளாக் 2க்கு 2.01 கோடி, பிளாக் 3க்கு 1.12 கோடி என டெண்டர் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஆன்லைன் டென்டரில் திட்ட மதிப்பீடு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என்கின்றனர். அப்படி இருக்கும்போது எப்படி பணிகளை எடுக்க விண்ணப்பிக்க முடியும் என கூறுகின்றனர் .மேலும் விண்ணப்பங்கள் அளிக்க குறுகிய காலமே அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    English Summary

    Allegations emerge over discrepancies between newspaper and e-tender notices for shifting the Tamil Nadu Chief Minister’s office.