சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை ஏற்கிறோம்! விஜய் ஓபன் டாக்

  • சென்னை: காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் பேசி வருகிறார். மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இப்படி இருக்கையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை ஏற்பதாக விஜய் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    அவர் பேசியதாவது, "சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை நண்பனாகவும், சட்டத்தையும் பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு காவல்துறையினர் எந்தவித அச்சம் இன்றி தங்கள் பணியை நேர்மையாக மேற்கொள்ளும் வகையில் சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

    Advertisement

    முதலமைச்சர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும், காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் எந்தவித அதிகார தலையீடு இருக்க கூடாது என்று கடுமையாக வலியுறத்தியுள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நிலைபாடு.

    இந்த அவையில் உறுப்பினர்கள் பலரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த அரசை குறைகூறும் நோக்கில் கூறியவர்களின் கருத்தைகூட மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் கவலையையும், அக்கறையையும் இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் கூட.. அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை பரிசீலித்து ஏற்பதில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

    English Summary

    CM Vijay: Chief Minister Vijay is addressing the Legislative Assembly today regarding the demands for grants for the Police Department. Meanwhile, opposition members created a significant uproar over law and order issues. Amidst this, Vijay’s statement acknowledging the criticisms raised by the opposition regarding the law and order situation has drawn attention.