வணக்கம் வைத்த சிஎம் விஜய்.. திரும்பிக் கொண்ட உதயநிதி! சட்டசபையில் தலைகீழான காட்சிகள்! வெடித்த மோதல்!

  • சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வெளிப்படையாகவே மோதல் வெடித்து வருகிறது. வார்த்தைப் போர் ஒரு புறம் இருக்க முதலமைச்சர் விஜய் மீது திமுக எம்எல்ஏக்களின் அணுகுமுறையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்கின்றனர். சட்டசபைக்குள் வந்த முதல்வர் விஜய் வணக்கம் வைத்தும் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முகத்தை திருப்பிக் கொண்டது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட்டும் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியினர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத் தொடருக்கு முதல் நாள் தான் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    தமிழக சட்டசபை

    நீதிமன்றம் தலையிட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் சிறைக்குச் செல்லாமல் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்வர் விஜய் மீது திமுக எம்எல்ஏக்கள் காட்டும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்கின்றனர் சட்டசபை நிகழ்வுகளை கவனிக்கும் செய்தியாளர்கள். கடந்த காலங்களில் சட்டசபைக்குள் முதலமைச்சர் அல்லது மூத்த தலைவர்கள் வரும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது வழக்கமாக இருந்தது.

    Advertisement

    முதல்வர் விஜய்

    ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்த போதும் கூட திமுக - அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவார்கள். ஒரு முறை ஜெயலலிதா சட்டசபையில் வந்தபோது திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்காமல் இருந்தது அப்போதைக்கு பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே கடந்த சட்டமன்ற கூட்டத்துடன் நடந்த போது முதல்வர் விஜய் சட்டசபைக்குள் வரும்போது உரிய மரியாதை அளிக்க வேண்டும் என திமுக அறிவுரை வழங்கியிருந்தது.

    முன்னாள் அமைச்சர்கள்

    மேலும் விஜய் வணக்கம் வைத்தால் பதிலுக்கு வணக்கம் வைக்க வேண்டும், எழுந்து நிற்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் விஜய் முதன்முறையாக சட்டசபைக்கு வந்த போது திமுக முன்னாள் அமைச்சர்கள் மூத்த எம்எல்ஏக்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். இதை அடுத்து பின்னால் இருந்த மற்ற உறுப்பினர்களும் எழுந்து வணக்கம் செலுத்தினர்.

    Advertisement

    பட்ஜெட் கூட்டத்தொடர்

    ஆனால் தற்போது சட்டசபையில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் மோதல் வெடித்திருக்கும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கியதில் இருந்து திமுக அணுகுமுறையை மாற்றி இருப்பதாக சொல்கின்றனர். குறிப்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக முன்னாள் துணை முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

    ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்

    இதன் தாக்கம் சட்டசபையிலும் எதிரொலித்தது. 5ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்துடன் தொடங்கிய போது முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வந்தார். ஆனால் திமுக தரப்பிலிருந்து எம்எல்ஏக்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை. அதே நேரத்தில் கேஎன் நேரு மட்டுமே வணக்கம் வைத்தார். அடுத்த நாள் சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் விஜய் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கும் சென்று வணக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கே என் நேருவை தவிர வேறு யாரும் அவருக்கு வணக்கம் வைக்கவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விஜயை பார்த்ததும் திரும்பிக் கொண்டார். இதனால் இருவர் இடையே நேரடியாக மோதிக் கொள்வது போல நடந்து கொண்டதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் புன்முறுவளுடன் விஜய் தனது முதலமைச்சர் இருக்கைக்கு சென்றார். அதற்கு பிறகு தான் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவகாரத்தில் பேசும் போது உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் விஜய் ஆவணங்களை படித்து பார்க்க வேண்டும், குறிப்பாக பேப்பர் படிக்க வேண்டும் என பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Vijay and Udhayanidhi's contrasting gestures in the Assembly highlight growing political tensions between TVK and DMK.