நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!

  • சென்னை: விவசாயிகளுக்கான நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய்.தமிழக சட்டசபையில் இன்று பேரவையின் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகின்றது. இன்று தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதலமைச்சர் விஜய் பேசுகையில், "விவசாயிகளில் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும்.

    Advertisement

    சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும்.

    நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன் 134க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோள் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay has announced a significant hike in the incentive payments for farmers cultivating paddy and sugarcane. He made this important announcement today in the State Assembly under Rule 110.