சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று பல்வேறு துறைகளின் கீழ் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலை கூடுதலாக 3 ரூபாய் உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று சட்டசபை கூடியது.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெற்ற கூட்ட தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. மேலும் 2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில் வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து சுமார் 11 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவைக்கு வருகை தந்தார். வந்தவுடன் 110 விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்," 1. கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையினை பரிசீலனை செய்து லிட்டர் ஒன்றுக்கு பால் கொள்முதல் விலை 44 ரூபாயாக வழங்கப்படும். ஏற்கனவே 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 2. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 196 புதிய மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு. 15,000 கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும். மேலும் ஏற்கனவே உள்ள மின் பாதைகளும் வலுப்படுத்தப்படும். 3. தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறன்கொண்ட New Supercritical Thermal Power Station ரூ. 20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 800 மெகாவத் திறன் கொண்ட இரண்டு அழகுகளுடன் மொத்தமாக 1200 மெகாவாட் திறன் கொண்ட நியூ சூப்பர் கிரிட்டிக்கல் தெர்மல் பவர் ஸ்டேஷன் 20800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். 4. மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மூலம் 36 புதிய 33/11 கிலோ ஓல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதம் அடைந்த மற்றும் பயன்பாட்டு காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், பில்லர் பாக்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் பணிகள் 1762 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 5. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபாக்சரிங் பார்க் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். உலக தரம் வாய்ந்த ஆர்&டி - ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 2000 கோடி வரை முதல்வர்கள் ஏற்கப்படும். மேலும் சுமார் 5000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும். 6. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் 400 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். உலக தரத்திலான வசதிகள் அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம் பெறும். உலகளாவிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும் உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும். 7. தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை போக்குவரத்து மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்" என அறிவித்துள்ளார்.