சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளது. முதல்வர் விஜய் தன்னுடைய ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கியதாக சர்ச்சையானது. இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பதவி வழங்கியதாக மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன், பீஸ்ட், லியோ போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார். விஜயுடன் நல்ல நெருக்கமானவராக அறியப்படுகிறார். இவர் விண்ணை தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களிலும் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2026-27 கல்வியாண்டில், இளங்கலை காட்சிக்கலை பட்ட படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இயக்குநர்கள் வெற்றி மாறன், லிங்குசாமி, பேரரசு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், விஜய் மில்டன், படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், ராமர், வண்ண வடிவமைப்பாளர் பாலாஜி, கலை இயக்குர் முத்துராஜ், ஒலி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மனோஜ் விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் இந்த நியமனம் சர்ச்சையாகியுள்ளது. தன்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசுப் பதவி வழங்கிய விஜய் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பி வருகிறார்கள். இதற்கு தவெகவினர், தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு இத்தனை நாட்கள் வெளியில் இருந்தா தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். திரைத்துறையில் தானே நியமனம் செய்யப்பட்டனர். எல்லாவற்றிலும் அரசியல் செய்து பழகிவிட்டனர் என்று பதில் அளித்துள்ளனர்.நியமனம் சர்ச்சை
தவெக பதில்