பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக அரசாணை ரத்து? விஜய் கையெழுத்திட்டதாக தகவல்!

  • சென்னை: சென்னையில் கடல் பகுதியை ஒட்டியுள்ள பட்டினப்பாக்கத்தில் (ஃபோர்ஷோர் எஸ்டேட்) புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் இதுவரை அரசால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.. இது முற்றிலும் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலாகும்.

    Advertisement

    தகவலின் பின்னணி என்ன?

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில், ₹1,200 கோடி செலவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்தால் நகரின் மையத்தில் அனைத்து நிர்வாகமும் ஒரே கூரையின் கீழ் இயங்கும் என்பது அரசின் திட்டமாக இருந்தது.

    Advertisement

    ஆனால், இந்த அரசாணை வெளியான நாள் முதலே பட்டினப்பாக்கம், முள்ளிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் அச்சமும் உருவானது.

    மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு

    கடற்கரையை ஒட்டியுள்ள லூப் ரோடு மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் வந்தால்:

    கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை பாதிக்கப்படும்.

    மீனவர்களின் படகுகள் நிறுத்தும் இடம், மீன் வலைகளைப் பராமரிக்கும் பகுதிகள் பறிபோகும் அபாயம் உள்ளது.

    மிகப்பெரிய அரசு அலுவலக வளாகம் அமைந்தால் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கெடுபிடிகள் அதிகமாகும்.

    Advertisement

    இதனால் பாதிக்கப்பட்ட மீனவ அமைப்புகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்தன. எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    ரத்து செய்தி எப்படி கிளம்பியது?

    மீனவ மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, முதல்வர் விஜய் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பட்டினப்பாக்கம் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் வேகமாகப் பேசப்பட்டு வருகிறது.

    ஆனாலும், தமிழக அரசின் செய்தித் தொடர்பு துறையிலிருந்தோ அல்லது பொதுப்பணித்துறையிலிருந்தோ இது தொடர்பாக எந்தவொரு புதிய ரத்து ஆணையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. மேலும், பழைய திட்டத்தைக் கைவிட்டு, சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை போன்ற வேறு மாற்று இடங்களை அரசு பரிசீலிக்கிறதா என்ற பேச்சுகளும் நிலவுகின்றன.

    Advertisement

    மக்கள் எதிர்ப்பு

    சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என்ற அரசின் அரசாணை வெளியான நாள் முதல், கடலோரப் பகுதிகள் கொந்தளித்துக் கிடக்கின்றன.

    பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம், நொச்சிக்குப்பம் என பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், "எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி, மீன் விற்பனையை முடக்கி, எங்களை இங்கிருந்து விரட்டப் பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி, செப்டம்பர் 21-க்குள் அரசாணையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் திட்டத்திலிருந்து அரசு பின்வாங்கத் தயாராகிவிட்டதாகவும், இதையும்கூட ஒரு மிகப்பெரிய அரசியல் லாபமாக மாற்ற தவெக தலைமை கணக்கு போட்டு வருவதாகவும் தலைமைச் செயலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிக வலுவான தகவல்கள் கசிந்துள்ளன.

    முதலில் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல், எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே அவசர அவசரமாக ஒரு அரசாணையை வெளியிடுவது.. பின்னர் மக்கள் கொந்தளித்து வீதிக்கு வரும்போது, முதலமைச்சரே நேரில் சென்று, "மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தலைவன் விஜய்.. மீனவர்களின் குரலைக் கேட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுகிறேன்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட வைப்பதுதான் இந்த வியூகத்தின் அடிநாதம் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    இதன்மூலம், ஆரம்பத்தில் நடந்த தவறான திட்டமிடலை மறைத்துவிட்டு, முதலமைச்சர் விஜய்யை "ரியல் சுறா" "மீனவர்களின் காப்பான்" "உங்க வீட்டு பிள்ளை" "மீனவர்களின் காவலன்", "மக்களின் மனதை அறியும் எளிய தலைவர்" என்று ஒரு புதிய பிம்பத்தைக் கட்டமைக்க தவெகவின் வியூக வகுப்பாளர்கள் களம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

    உண்மை நிலை என்ன?

    பொதுமக்களும் மீனவர்களும் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம்.. இந்தத் திட்டத்தை அரசு தொடருமா அல்லது உண்மையில் மக்களின் எதிர்ப்பைக் கண்டு திட்டத்தை முழுமையாகக் கைவிடுமா என்பதுதான். தற்போது பரவும் அரசாணை ரத்து செய்திக்கு அரசு முறைப்படி விளக்கம் தரும் வரை, இது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே பார்க்கப்பட வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே நிலவரம் முழுமையாகத் தெளிவாகும்.

    English Summary

    CM Vijay Cancels Pattinapakkam Secretariat GO? Ground Reality Behind Unconfirmed Reports