அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை!

  • சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக பேசப்பட உள்ளது.

    English Summary

    CM Vijay: Tamil Nadu Chief Minister Vijay is holding an emergency meeting at the Secretariat with senior officials regarding women’s safety and law and order issues in the state. The meeting comes amid growing concern over recent crimes against young girls in Coimbatore and Villupuram districts. Senior police and home department officials are participating in discussions focused on preventing sexual crimes and strengthening public safety measures.