சட்டசபையில் ஒரே ஃபன்! இனி கதவுகளை லாக் செய்யணும் போல! திமுக வெளிநடப்புக்கு விஜய் கலகல

  • கரூர்: பேசுங்க, பேசுங்கன்னு சொல்றாங்க, பேசுனா எழுந்து ஓடுறாங்க, இனி சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பு கதவை மூட சொல்ல வேண்டும் போல என முதல்வர் விஜய் காமெடியாக பேசினார்.

    Advertisement

    கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விவரித்தார்.

    Advertisement

    அவர் பேசுகையில் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்பதற்காக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினேன். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என பல்வேறு இடங்களுக்கு நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.

    அரியலூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுவிட்டு பெரம்பலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நடக்கும் இடத்திற்கு போறது முன்பு, பெரம்பலூர் போலீஸ் வந்து எங்களிடம், கூட்டம் அதிகமாக இருக்கிறது, வராதீங்கன்னு சொன்னாங்க!

    போலீஸ் அறிவுறுத்தலை நாம் கேட்டுதானே ஆகவேண்டும். அதே நேரத்தில் பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பையும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு மனவலியுடன் பெரம்பலூருக்கு போகாமல் திரும்பிவிட்டோம்.

    Advertisement

    அதன் பிறகு நான் வராததற்காக பெரம்பலூர் தொகுதி மக்களிடம் மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. அது போல் நாமக்கல்லில் கூட்டம் முடித்துக் கொண்டு கரூருக்கு சென்ற போது அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் செய்திருக்கலாமே?

    "இங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. கன்ட்ரோல் செய்ய முடியவில்லை, வராதீர்கள்" என சொல்லியிருக்கலாமே. போலீஸ் நினைத்தால் எந்த ஒரு கூட்டத்தையும் ரத்து செய்யலாமே!

    அதையெல்லாம் செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு போலீஸே எங்களை உள்ளே கூட்டிட்டு வந்து விட்ட நாடகம் இருக்கு பாருங்க! நம்பிவிட்டேன், அன்று இருந்த கரூர் போலீஸை முழுசா நம்பிட்டேன்.

    Advertisement

    கரூரில் பேசிய போது "எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல் துறைக்கு நன்றி" என்றெல்லாம் சொன்னேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எனக்கு தெரியாது. இதுக்கெல்லாம் யார் காரணம்? இதை யார் சொல்லி செய்தது?

    என்னிடம் வந்து ஜனமா, பணமா என கேட்டால் ஜனம்தான் முக்கியம் என்பேன். எனக்கு உங்களைவிட காசு பணம் எல்லாம் முக்கியம் கிடையாது.

    நம் மக்கள் அமைத்துக் கொடுத்த அரசை குறைகளை டிசைன் டிசைனாக சொல்கிறார்கள். ஒவ்வொரு துறைகளிலும் அந்த பார்ட்டி ஃபண்ட்! கட்சி நிதி என்ற பெயரில் இவர்கள் அடித்த கொள்ளை இருக்கே! அதிமுகவும் திமுகவும் மாறி மாறி இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள்.

    Advertisement

    இதில் ஒரு பெரிய காமெடி என்னவென்றால்! சட்டசபையில் நான் பேசிய போது பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னேன். அது என்ன பார்ட்டி, என்ன ஃபண்ட், யாரு என்ன என யார் பெயரையும் சொல்லவில்லை. பார்ட்டி ஃபண்ட் என சொன்னதும் எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்!

    எனக்கு முதலில் புரியவில்லை. ஏம்ப்பா ஓடுறாங்க, அப்படி என்ன நம்ம சொல்லிட்டோம்? குற்றம் உள்ள நெஞ்சுக்குத்தான் குறுகுறுன்னும்! இது எப்படி இருக்கிறது தெரியுமா? எங்கப்பா பீரோக்குள்ள இல்லை, எங்கப்பா பீரோக்குள்ள இல்லனு சொல்ற மாதிரி இருக்கு! இனி நான் எழுந்து சட்டசபையில் பேசும் போது எல்லா கதவுகளையும் இழுத்து மூடணும் போல!

    Advertisement

    அய்யோ ஏன் கேக்குறீங்க, இவங்களோட செம கூத்து, செம ஃபன்னா இருக்கு! சென்னையில் ஒரு பாலம் கட்டுவதற்கு சாதாரணமாக ஆகும் செலவை விட இரட்டிப்பு மடங்கு அதிகத்தில் ஒரு டென்டர் அவர்கள் ஆட்சி காலத்தில் விட்டிருந்தார்கள்.

    அதையெல்லாம் தோண்டி எடுத்து கண்டுபிடித்து அந்த டென்டர்களை ரத்து செய்துள்ளோம். இன்னும் எத்தனை கோடி ஊழல், எத்தனை லட்சம் கோடி ஊழல் தோண்ட தோண்ட வருமோ தெரியவில்லை!

    ஒவ்வொரு முகமூடியா கிழியுது! அய்யோ இந்த விஜய், ஒவ்வொரு கதையா எடுத்து வெளியே விட்டுடுவான் போலயே என கதறுகிறார்கள். ஊழலில் ஊறி போனவங்க இப்படித்தான் இருப்பாங்க! இவ்வாறு விஜய் பேசினார்.

    English Summary

    CM Joseph Vijay in karur jovially says that hereafter we have close the doors of the assembly when I start to reply.