தவெக எம்எல்ஏ பல்லவி குழந்தையை கையில் தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்.. பெயர் சூட்டி வாழ்த்து!

  • சென்னை: திருவிக நகர் தொகுதி எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையை தமிழக முதல்வர் விஜய் முத்தம் கொடுத்து கைகளில் வைத்து கொஞ்சிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அப்போது பல்லவி எம்.எல்.ஏ விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் டிவிகே என்ற பெயர் வரும் வகையில் குழந்தைக்கு 'தமிழ் வெற்றிக் கொண்டான்' என பெயர் வைப்பதாக பல்லவி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்லவியின் குழந்தைக்கு தமிழ் வெற்றிக் கொண்டான் என பெயர் சூட்டினார்.

    Advertisement

    சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பல்லவி. 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது தேர்தல் களத்தில் அனல் பறக்க பிரசாரம் செய்த பல்லவிக்கு தேர்தல் முடியும் முன்னே குழந்தையும் பிறந்தது. வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தனது கைக்குழந்தையுடன் வந்து பங்கேற்று வருகிறார்.

    Advertisement

    குழந்தையை கையில் வைத்து கொஞ்சிய விஜய்

    தனது குழந்தைக்கு டிவிகே என்று பெயர் சூட்ட இருப்பதாக பல்லவி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்கிடையே இன்று முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான இன்று சட்டசபை வளாகத்தில் முதல்வர் விஜய்யை தனது கைக்குழந்தையுடன் சந்தித்தார். அப்போது விஜய் பல்லவியின் குழந்தையை கையில் தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சினார். பின்னர் குழந்தைக்கு வாழ்த்தினையும் கூறினார்.

    அப்போது முதல்வர் விஜய்க்கு பல்லவியும், அவரது கணவரும் பிறந்தநாள் வாழ்த்தை கூறினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் டிவிகே என்ற பெயர் வரும் வகையில் குழந்தைக்கு 'தமிழ் வெற்றிக் கொண்டான்' என பெயர் வைப்பதாக பல்லவி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்லவியின் குழந்தைக்கு தமிழ் வெற்றிக் கொண்டான் என பெயர் சூட்டினார். இதையடுத்து விஜய்யும் தமிழ் வெற்றிக் கொண்டான் என குழந்தையை பெயரை சொல்லி அழைத்தார்.

    Advertisement

    டிவிகே என பெயர் வரும்படி

    சட்டசபை வளாகத்தில் குழந்தைக்கு விஜய் முத்தம் கொடுத்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பல்லவி எம்.எல்.ஏ, "என் குழந்தைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை வைக்க விரும்பினேன். என் வெற்றிக்கு உதவிய என் குழந்தைக்கு முதலில் தளபதி வெற்றி கொண்டான் என வைக்க விரும்பினோம். பிறகு தமிழ் வெற்றி கொண்டான் என பெயர் வைத்தோம். இது உங்கள் எல்லாருக்கும் தெரியும். டிவிகே என பெயர் வரும்படி நாங்கள் இந்த பெயரை தேர்வு செய்தோம்.

    Advertisement

    இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காகவும், என் குழந்தைக்கு அவரது வாயால் பெயரை சூட்டி அழைக்க வேண்டும் என விஜய்யை சந்தித்தோம். அப்போது அவர் என் குழந்தையை கைகளில் வைத்து கொஞ்சி முத்தம் கொடுத்தார். எங்களுக்கும் வாழ்த்தும் கூறினார். அவருக்கு நாங்களும் பிறந்தநாள் வாழ்த்தும் கூறினோம்" என பல்லவி கூறினார்.

    பிறந்த நாளிலும் பிசியாக இயங்கிய முதல்வர்

    முதல்வர் விஜய் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர்கள் முக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை கூறினர். சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய்க்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வாழ்த்து கூறினார். இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

    Advertisement

    ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று உரையாற்றினார். சட்டப்பேரவையில் அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்த முதல்வர் விஜய், சபை நடவடிக்கைகள் முடிந்ததும் வேளாண் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்தார். தொடர்ந்து அதிகாரிகள், அமைச்சர்கள் என பலருடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்தார்.

    English Summary

    CM Vijay: A video of Tamil Nadu Chief Minister Vijay affectionately holding and kissing TVK MLA Pallavi’s baby has gone viral on social media. During the interaction, Pallavi conveyed birthday wishes to Vijay, who formally named the child “Tamil Vetri Kondan.”