சென்னை: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, முந்தைய திமுக அரசால் மாநிலத்தின் கஜானா காலியாகிவிட்டதாகவும், வரலாறு காணாத கடன் சுமையே மிஞ்சியிருக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் விமர்சித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய் தேவையற்ற செலவு செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் அரசு நிர்வாகம் அறிவித்து வரும் செலவுத் திட்டங்கள், தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் பல தலைமுறைகளாகச் செயல்பட்டு வந்த முதல்வர் அலுவலகத்தை, அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மூன்று நிர்வாகப் பிரிவுகள், நவீன ஆலோசனைக் கூடம் மற்றும் கடல் வியூ அறைகளை அமைக்க சுமார் ₹5.54 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியிருந்தது. முந்தைய முதல்வர்கள் எளிய முறையிலேயே கோட்டை அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், நிதி நெருக்கடி நிலவும் சூழலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய ஆடம்பர அலுவலகம் தேவையா எனக் கேள்வி எழுப்பி திமுக கண்டனம் தெரிவித்தது. இதற்கான ஆன்லைன் டெண்டர் நடைமுறைகளிலும் விதிமீறல்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சட்டப்பேரவையில் இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இது முதல்வரின் தனிப்பட்ட ஆடம்பரத்திற்கான நடவடிக்கை அல்ல.. நிர்வாக அவசியத்திற்கான ஏற்பாட.. எனத் தெரிவித்தார். கோட்டை அலுவலகத்தில் அரசு செயலாளர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான நெருக்கடியான அறைகளில் பணியாற்றி வருவதாகவும், பார்வையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வரவேற்பு அறைகள் போதுமானதாக இல்லாததால் மட்டுமே இந்த இடமாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய சலுகை அறிவிப்புகள் அரசியல் அரங்கில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தின. தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிப் பாகுபாடின்றி தொகுதிப் பணிகளை மேற்கொள்ள அரசு வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வாகனம் மற்றும் ஓட்டுநர் பராமரிப்புப் படி: எரிபொருள், வாகனப் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்காக மாதம் ₹75,000. இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதாந்திரச் சலுகையாக மொத்தம் ₹1 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எளிய பின்னணியில் இருந்து முதன்முறையாக வெற்றி பெற்று வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் களத்தில் தீர்க்கவும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்று முதலமைச்சர் விஜய் இதற்கு நியாயம் கற்பிக்க பார்க்கிறார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்தது. ஒருபுறம் கடுமையான நிதிச் சுமை மற்றும் கடன் சுமையைச் சுட்டிக்காட்டும் அரசு.. திமுக கஜானாவை காலி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டும் விஜய் அரசு.. மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளுக்கான சலுகைகளையும் தலைமைச் செயலக நிர்வாக அலுவலக மாற்றத்திற்கான செலவுகளையும் தாராளமாக மேற்கொள்வது முரணாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடி வருகின்றன. கடன் உள்ளவர்கள் ஆடம்பர செலவு செய்வது என்ன நியாயம்.. விஜய் பேசுவதும் செய்வதும் வேறு வேறாக இருக்கிறதே.. எதோ இடிக்குதே என்று பொதுமக்களும் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய முதல்வர் அலுவலகம்
234 எம்எல்ஏக்களுக்கும் புதிய கார்கள் மற்றும் ₹1 லட்சம் மாதாந்திரப் படி
வாகனம் மட்டுமின்றி, எம்.எல்.ஏ-க்களுக்குக் கூடுதல் படிகளும் அறிவிக்கப்பட்டன:
உதவியாளர் படி: எம்எல்ஏக்கள் தங்களுக்கு அலுவலக உதவியாளர்களை நியமித்துக் கொள்ள மாதம் ₹25,000.இடிக்குதே விஜய் சார்