பிரதமர் ரேஸ்.. மிகவும் சீரியசாக இருக்கும் விஜய்.. பல மாநிலங்களில் அதிகாரபூர்வ தவெக பக்கம் தொடக்கம்!

  • சென்னை: வட மாநில சமூக வலைதளங்களில் VijayThalapathy என்ற வார்த்தை திடீரென ட்ரெண்டாகி தேசிய அளவில் புருவம் உயர்த்த வைத்த நிலையில், இதற்குப் பின்னால் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஒரு தேசிய அளவிலான டிஜிட்டல் வியூகம் செயல்பட்டு வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    Advertisement

    2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி பிற இந்திய மாநிலங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த தவெக தலைமை ஒரு மாபெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரைகள், அரசு நலத்திட்டத் தொடக்க விழாப் பேச்சுகள் மற்றும் அரசியல் கருத்துகள் அனைத்தும் உடனுக்குடன் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இணையவெளியில் அசுர வேகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.

    மாநில வாரியாக இயங்கும் 'அஃபிஷியல்' இன்ஸ்டா பக்கங்கள்

    இந்த டிஜிட்டல் யுக்தியின் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வெளி மாநிலத்திற்கும் தனித்தனியாக குறைந்தது 5 முதல் 6 அங்கீகரிக்கப்படாத (Unofficial) தவெக இன்ஸ்டாகிராம் பக்கங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இது போக இப்போது அதிகாரபூர்வ பக்கங்களும் தொடங்கப்பட்டு உள்ளன.

    Advertisement

    உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தென் மாநிலங்களுக்கென இயங்கும் இந்த சமூக வலைதளப் பக்கங்கள், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிகளிலேயே தினசரி பதிவுகளை வெளியிடுகின்றன. தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை உள்ளூர் மக்களுக்குப் புரியும் எளிய நடையில் வீடியோ ரீல்ஸாகவும், கிராபிக்ஸ் கார்டுகளாகவும் வடிவமைக்கப்பட்டு பகிரப்படுகின்றன.

    தவெக பாய்ச்சல்

    பொதுவாக மாநிலக் கட்சிகள் தங்களது சொந்த மாநில எல்லைக்குள்ளேயே தங்களது அரசியல் பிரச்சாரங்களை முடித்துக் கொள்ளும். அண்டை மாநிலங்களில்கூட பெரிதாக கவனம் செலுத்தாத நிலையில், ஒரு மாநில கட்சி தனது சொந்த மண்ணைத் தாண்டி, நாடு தழுவிய அளவில் இவ்வளவு திட்டமிட்டு பல மொழிகளில் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

    Advertisement

    தவெகவின் இந்த வியூகம் வெறும் வடஇந்திய ஆதரவாளர்களை ஈர்ப்பதற்காக மட்டும் செய்யப்படவில்லை; மாறாக, 2029-ல் விஜய்யை ஒரு தேசிய அளவிலான தலைவராகவும், தெற்கிலிருந்து உருவாகும் வலுவான பிரதமர் மாற்று முகமாகவும் வட இந்திய மற்றும் பிற மாநில வாக்காளர்களிடம் பதிய வைப்பதே இதன் முதன்மை நோக்கமாக உள்ளது.

    விர்ச்சுவல் வாரியர்ஸ்

    மரபுரீதியான அரசியலில் கட்சிக் கொடியைப் பிடித்துக் கொண்டு வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரம் கொடுக்கும் பழைய தொண்டர் படை முறையைத் தாண்டி, இன்றைய நவீன அரசியல் களத்தில் விர்ச்சுவல் வாரியர்ஸ் எனப்படும் இணையவெளிப் போராளிகளே புதிய காலத்து தொண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.

    Advertisement

    ஏற்கனவே 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தவெக தலைவர் விஜய் தேசிய அரசியல் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

    இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து நடத்திய ஆகஸ்ட் 2026 மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற பட்டியலில் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    முக்கிய தலைவர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே விஜய் இந்த இடத்தைப் பிடித்திருப்பது, எதிர்காலத்தில் ராகுல் காந்தியின் முதன்மை எதிர்க்கட்சி தலைவர் இடத்திற்கே நேரடி சவாலாக மாறுமா என்ற விவாதத்தை டெல்லி அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.

    Advertisement

    கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

    ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். எனினும், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு இருந்த 55 சதவீத ஆதரவு தற்போது 48.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மோடியின் செல்வாக்கு 50 சதவீதத்திற்கு கீழ் குறைவது 2024 ஆகஸ்ட்டிற்குப் பிறகு இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

    அதே சமயம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். கடந்த ஜனவரியில் அவருக்கு 27 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில், பெரிய அளவிலான வளர்ச்சி எதுவும் இன்றி அவரது வாக்கு வங்கி அப்படியே தேங்கி நிற்கிறது.

    மூன்றாவது இடத்தில் விஜய் மாஸ் என்ட்ரி!

    இந்தக் கருத்துக்கணிப்பில் மிக முக்கியமான ஹைலைட்டாக அமைந்தது தமிழக முதலமைச்சர் விஜய்யின் வருகைதான். தேசிய அளவிலான பிரதமர் விருப்பப் பட்டியலில் 9.2 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று விஜய் நேரடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பல மூத்த தேசியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், நிர்வாகத்தில் காட்டும் வேகம், தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அணுகுமுறை மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை தேசிய அளவில் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில்தான் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சலசலப்புகளையோ, ராகுல் காந்திக்கு எதிராக எழும் விவாதங்களையோ சட்டை செய்யாமல், தனது டிஜிட்டல் சாம்ராஜ்யத்தை பிற மாநிலங்களில் தவெக அதிவேகமாக விரிவுபடுத்தி வருவது தேசிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2029-ஐ நோக்கி நகர்த்தப்படும் இந்தக் காய்கள், ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய்யை, நாடு தழுவிய அளவில் ஒரு தவிர்க்க முடியாத தேசிய சக்தியாக உருமாற்றும் மிகத் தீவிரமான அரசியல் திட்டமாக மாறியுள்ளது.

    English Summary

    CM Vijay Deploys Virtual Warriors Across India as Hindi Speeches Trend Ahead of 2029