தமிழகத்தை உலுக்கிய பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள்! 2 மணி நேரம் தாமதமாக சட்டசபைக்கு வந்த விஜய்

  • சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தொடர் கொலைகள், மேகமலை பிரச்சினை, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டது என பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முதல்வர் விஜய் சட்டசபைக்கே வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரே பதிலளித்தனர்.

    Advertisement

    முதல்வர் விஜய் தனியார் ஆங்கில சேனல் நடத்திய 100-வது நாள் விழாவில் பங்கேற்க சென்றிருந்ததால், தொடர்ந்து காலை 11.35 மணியளவில், 2 மணி நேரம் தாமதமாக சட்டசபைக்கு வருகை தந்தார்.

    Advertisement

    சட்டசபைக்கு வராத விஜய்

    தமிழக சட்டசபையில் கடந்த வாரம் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. கோவை கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருவொற்றியூர் மாணவர் சக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் இன்று அவையில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் இன்று அவைக்கே வரவில்லை.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரே பதிலளித்தனர். சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து முதல்வர் விஜய் அவை நடவடிக்கையில் பங்கேற்ற நிலையில், இன்றைய கூட்டத்தில் தற்போது வரை அவைக்கு வராதது கவனம் பெற்றது.

    Advertisement

    தாமதமாக வந்தார்

    முதல்வர் விஜய் இன்று அவைக்கு வராததற்கு சென்னையில் இன்று பிரபல ஆங்கில சேனல் நடத்திய 100-வது நாள் விழாவில் பங்கேற்க சென்றிருந்ததே காரணம் ஆகும். பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ரவுண்டேபிள் விவாத நிகழ்ச்சி இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் பங்கேற்று இருந்தார்.

    தனியர் தொலைக்காட்சியின் ரவுண்டேபிள் விவாத நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழில் துறைப் பிரமுகர்கள் என பல்வேறு துறைகளில் ஆளுமைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் விஜய் சட்ட சபைக்கு தாமதமாக வருகை தந்தார். காலை 11.35 மணியளவில் முதல்வர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்தார். அதாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு முதல்வர் விஜய் 2 மணி நேரம் தாமதமாக சட்டசபைக்கு வந்தார்.

    English Summary

    CM Vijay: While opposition parties raised various issues like serial killings, Meghamalai issue, shooting death of 3 Tamils ​​in Karnataka today in the Tamil Nadu Assembly, Chief Minister Vijay was expected to give an answer on law and order. But Chief Minister Vijay did not come to the Assembly today. Ministers Aadhav Arjuna and Nirmal Kumar themselves answered the questions of Leader of Opposition Udayanidhi Stalin.