கோட் சூட்டை தூக்கி வீசிய விஜய்.. சில்வர் ப்ளூ சட்டையில் வந்த CM! ஏன் இந்த மாற்றம்? பின்னணி

  • சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் முதல்வர் விஜய் அணிந்து வந்த உடை கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமான அரசியல் பரபரப்புகளுடன் மட்டுமே தொடங்குவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் தலைமைச் செயலகத்தின் பேரவை மண்டபத்திற்குள் நுழைந்த நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் பார்வையும் ஒரே ஒரு விஷயத்தின் மீதுதான் நிலைத்து நின்றது. அது.. தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் உடை மாற்றம்!

    Advertisement

    முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் நேர்த்தியான கருப்பு பிளேஸர் அல்லது கோட்-சூட் உடைகளிலேயே தோன்றி வந்த முதல்வர் விஜய், இன்று முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பேரவைக்கு வருகை தந்தார். நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நாளில், முதல்வர் விஜய் சில்வர் புளூ ( நிற சட்டையில் மிக எளிமையான தோற்றத்தில் காட்சியளித்தார்.

    எப்போதும் மிடுக்கான கோட்-சூட் உடையில் எக்ஸிகியூட்டிவ் லுக்கில் வலம் வரும் முதல்வர், இன்றைய பட்ஜெட் நாளில் திடீரென இந்த எளிமையான ஆடைக்கு மாறியதன் பின்னணி என்ன? இதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் உளவியல் காரணங்கள் என்னவென்று கோட்டை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    என்ன காரணம்?

    ஒரு அரசியல் தலைவரின் உடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல.. அது அவர் மக்களுக்குத் தர நினைக்கும் அரசியல் செய்தி. தமிழக அரசியலில் கார்ப்பரேட் லுக் அல்லது எலைட் தலைவர் என்ற விமர்சனம் விஜய்யின் மீது ஆரம்பம் முதலே மாறாமல் வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, சட்டமன்றத்தில் அவர் கோட் அணிந்து அமர்வதை எதிர்த்தரப்பினர் அவ்வப்போது விமர்சித்தும் வந்தனர்.

    இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பது அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள், மகளிர் மற்றும் ஏழை எளியோருக்கான நிதியறிக்கை. இத்தகைய மக்கள் நல பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில், தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல்வர் மிகவும் எளிமையாகவும், மக்களோடு ஒருவராகவும் காட்சியளிக்க வேண்டும் என்ற உத்தியே இந்த உடை மாற்றத்திற்கு முதல் காரணம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

    Advertisement

    சில்வர் புளூ கலர் சைக்காலஜி

    அரசியல் உளவியலில் சில்வர் புளூ நிறம் அமைதி, தெளிவு, நிதானம் மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பதாகும்.

    அதே சமயம் ஜோதிட ரீதியாக விஜய்க்கு இது செல்வதை கொடுக்கும் கலர் என்றும் சொல்கிறார்கள். அதாவது நீங்கள் இந்த உடையில் இன்று செல்லலாம் என்று ஜோதிடர் அவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

    நிதி நெருக்கடிகளும், கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியான பின்னணியில், இந்த பட்ஜெட்டை அரசு எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த நிறத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

    வெள்ளைச் சட்டை-வேட்டி கலாச்சாரம்

    மேலும், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் பாரம்பரிய வெள்ளைச் சட்டை-வேட்டி கலாச்சாரத்திலிருந்து விலகி, நவீன தலைமுறை இளைஞர்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் கேஷுவல் பாணியை அவர் கையில் எடுத்துள்ளார்.

    முதல்வரின் இந்த திடீர் டிரான்ஸ்ஃபர்மேஷன் பேரவை உறுப்பினர்களிடையே மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

    English Summary

    CM Vijay Ditches Suit for Silver Blue Shirt in Budget Assembly session ?