விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து

  • விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பெண்களின் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' (Singappennae Special Task Force) தொடக்க விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    Advertisement

    இந்த விழாவில் பெண்களுக்கான பாதுகாப்புப் படைத் திட்டம் தொடங்கப்பட்டது ஒருபுறம் என்றால், மறுபுறம் தமிழக முதலமைச்சர் விஜய் எடுத்த ஒரு முக்கிய முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

    Advertisement

    பதவியேற்பு விழா சர்ச்சை

    கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது, அதற்கான விழா ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகையின் (Raj Bhavan) வழிகாட்டுதலின்படியே அதிகாரிகள் செய்திருந்தனர். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால அரசு மரபுகளை முற்றிலும் தலைகீழாக மாற்றி, விழாவின் துவக்கத்தில் முதலாவதாக 'வந்தே மாதரம்' பாடலும், இரண்டாவதாக 'தேசிய கீதமும்' பாடப்பட்டு, 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகவே பாடப்பட்டது.

    தமிழ்நாட்டில் எந்தவொரு மாநில அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதுதான் காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும். ஆனால், ஆளுநர் மாளிகை காட்டிய இந்த புதிய நடைமுறை பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்ததுடன், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    பிரதமர் மோடி சந்திப்பு

    பதவியேற்பு விழாவில் நேர்ந்த இந்தச் சர்ச்சை குறித்துப் முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் மே 27 அன்று டெல்லியில் உள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மிக முக்கியச் சந்திப்பில், தமிழக நலன் சார்ந்த பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

    அதில் மிக முக்கியமாகவும், முதல் கோரிக்கையாகவும், ஆளுநர் மாளிகை நடைமுறைகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை காரணமாகத் தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்டது குறித்துத் தனது குற்றச்சாட்டியும், அதை சரி செய்ய கோரியும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

    Advertisement

    முதல் நிகழ்ச்சி.. முதல் பாடல்..

    மாநிலத்தின் கலாச்சார மரபுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற விஜயின் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது முதலாவது அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதல் பாடலாகப் பாடப்பட்டு முறைப்படி நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    ராஜரத்தினம் மைதானத்தில் சம்பவம்:

    சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவில், விழாவிற்கு வருகை தந்த விஜய், புதிய சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் கம்பீரமான மற்றும் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை (Guard of Honour) ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான பிரத்யேக லோகோவை (Logo) வெளியிட்டார்.

    பெண்களின் அவசரக் காலப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட உள்ள அதிநவீன சிறப்பு ரோந்து வாகனங்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன் நின்றுவிடாமல், அந்த ரோந்து வாகனத்தை அவரே நேரில் ஓட்டிப் பார்த்து (Test Drive) அதன் செயல்பாடுகளைத் ஆய்வு செய்தார்.

    English Summary

    Chief Minister Vijay has launched the Singappennae Special Task Force for women's safety in Tamil Nadu. In a significant protocol change, Tamilthai Vazhthu was sung first in the government event, following his meeting with Prime Minister Narendra Modi. முதலமைச்சர் விஜய் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'யை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.