வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து சொன்ன முதலமைச்சர் விஜய்

  • சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில், "நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement

    இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!" என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    முதலமைச்சரின் வாழ்த்து செய்தி வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், சமீப நாட்களாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை குறிப்பிட்டு அதை சரி செய்ய வலியுறுத்தியிருக்கிறார்கள். இதையும் கவனத்தில் கொண்டால்.. முதல்வர் சொல்வதை போல வாழ்விலும் நலமும், வளமும் பெருகும் என்று எதிர்க்கட்சியினர் கூறியிருக்கினர்.

    Advertisement

    குறிப்பாக அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நல்ல தரமான அரசி வேண்டும் எனில், கிலோ ரூ.90 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. காய்கறி, இதர மளிகை பொருட்கள் விலையும் ஏறியிருக்கிறது. இன்று கன்னியாகுமரி தோவாளை பூ மார்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.1,250க்கும் ஒரு தாமரை ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழக்கள் விலை சொல்வே வேண்டியதில்லை. இப்படி ஏறியிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

    English Summary

    CM Vijay: Across Tamil Nadu, the celebrations for Ayudha Puja and Vijayadashami have begun today. On this occasion, Chief Minister Vijay has extended his greetings, expressing the hope that the state will excel in education and industrial development, and that together, a successful Tamil Nadu will be built.~