கெஜ்ரிவால் பாணியில் விஜய் மாஸ்டர் பிளான்.. கோவா, பஞ்சாப், டெல்லியை வளைத்து 'தேசிய கட்சி' அங்கீகாரம்?

  • சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தவெக தலைவர் விஜய் தன்னை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் விவகாரம் தேசிய அரசியலில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    காங்கிரஸ் தலைமையின் மிரட்டல்களையோ, தலைமைச் செயலகத்திற்கு ராகுல் காந்தியின் தூதர்களாக வந்த மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் சந்தித்தபோது ஏற்பட்ட அதிருப்திகளையோ துளியும் பொருட்படுத்தாத முதலமைச்சர் விஜய், தனது பிரதமர் கனவை வெறும் வெற்று முழக்கமாக வைத்திருக்காமல், அதனைச் சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதிப்படுத்த ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளார்.

    Advertisement

    ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் குறுகிய காலத்தில் தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்று தேசிய அரங்கில் தனி முத்திரை பதித்த அதே தேர்தல் உத்தியை, தற்போது தவெக தலைவர் விஜய்யும் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆம் ஆத்மி மாடல் என்ன?

    தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு மாநிலக் கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உருவெடுக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் Delhi-யில் ஆட்சியைப் பிடித்தார்; பின்னர் Punjab-ல் ஆட்சியைப் பிடித்து, தொடர்ந்து Goa மற்றும் குஜராத் மாநிலங்களில் கணிசமான வாக்குகளையும் இடங்களையும் பெற்று தேர்தல் ஆணையத்திடமிருந்து 'தேசிய கட்சி' அந்தஸ்தை மிக நேர்த்தியாகப் பெற்றார்.

    Advertisement

    இதே பாணியைப் பின்பற்றி, தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் தவெகவின் தேர்தல் அங்கீகாரத்தை விரைவாக நிலைநிறுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    *கோவா, பஞ்சாப் மற்றும் டெல்லியைக் குறிவைப்பது ஏன்?

    ஏற்கனவே உ.பி., பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' மூலம் இந்தி மொழியில் ரீல்ஸ்களைப் பரப்பி விஜய்க்கான மாஸ் பிம்பம் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக நேரடித் தேர்தல் களத்திற்கு கோவா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை தவெக தேர்வு செய்துள்ளது. கோவா, டெல்லி, பஞ்சாப் எல்லாம் சிறிய மாநிலம் என்பதால் எளிதாக வெல்ல முடியும்.

    Advertisement

    கோவா: சிறிய மாநிலமாக இருந்தாலும், மாற்று அரசியலை விரும்பும் இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் அதிகம் உள்ள களம். அங்கு ஏற்கனவே சினிமா மூலமும், சமூக ஊடகங்கள் வழியே விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு ஒருசில இடங்களில் வென்றாலோ அல்லது கணிசமான வாக்கு சதவீதத்தைப் பிடித்தாலோ எளிதாக மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற முடியும். கிறிஸ்துவர்கள் அதிகம்.

    பஞ்சாப் மற்றும் டெல்லி: பாரம்பரிய காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வெளியே புதிய தலைமைகளை வரவேற்கும் மனநிலை கொண்ட களங்கள். தேசிய அரசியலின் அதிகார மையமான டெல்லியிலும், வேளாண் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் உள்ள பஞ்சாபிலும் தவெகவின் கட்டமைப்பை நிறுவுவது தேசிய ஊடகங்களின் கவனத்தை நேரடியாக ஈர்க்கும்.

    Advertisement

    இந்த மூன்று மாநிலங்களிலும் தமிழகத்தைப் போலவே தீவிரமான டிஜிட்டல் பிரச்சாரங்களையும், இளைஞர் அமைப்புகளையும் கட்டமைத்து, வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிட தவெக தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இங்கே பாதிக்கு பாதி இடங்களை வென்றால் தேசிய அங்கீகாரம் கிடைத்துவிடும்.

    தேசியக் கட்சி அந்தஸ்தும்... 2029 பிரதமர் கனவும்!

    தமிழகத்தில் தனித்து 35% வாக்குகளுடன் கோட்டையைக் கைப்பற்றியுள்ள விஜய், மேலும் 3 மாநிலங்களில் தவெகவுக்கு தேர்தல் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டால், மிகக் குறுகிய காலத்தில் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 'தேசியக் கட்சி'யாக தவெக உருவெடுத்துவிடும்.

    அவ்வாறு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைத்துவிட்டால், தேசிய அளவில் விஜய்யை ஒரு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எவரும் கேள்வி எழுப்ப முடியாது. வெறும் தமிழகத்தின் பிராந்தியத் தலைவராக நின்று பேசுவதற்கும், நாடு தழுவிய அங்கீகாரம் பெற்ற ஒரு தேசியக் கட்சியின் தலைவராக நின்று பேசுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதை விஜய் உணர்ந்துள்ளார். 1996 தேவகவுடா பாணியில் பல்வேறு மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து 100 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது திட்டத்திற்கும் இந்த அந்தஸ்து அசைக்க முடியாத சட்டப்பூர்வ அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

    Advertisement

    காங்கிரஸுக்கு வைக்கப்படும் அடுத்த செக்

    ராகுல் காந்திதான் தேசிய அளவிலான ஒரே மாற்று என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவரும் வேளையில், தவெகவை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சியாக மாற்றி, ராகுலுக்கு நிகரான தேசியத் தலைவராக விஜய்யை அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தும் இந்த நகர்வு காங்கிரஸுக்கு மிகப்பெரிய அரசியல் அடியாக அமையும்.

    எந்தவொரு சலசலப்புக்கும் பதிலளிக்காமல், தனது 'தேசிய வெற்றி கழகம்' இலக்கை நோக்கி கெஜ்ரிவால் பாணியில் விஜய் அமைதியாக எடுத்து வைக்கும் இந்த ராஜதந்திரப் பாய்ச்சல், 2029 தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கத் தொடங்கியுள்ளது.

    English Summary

    CM Vijay Eyes AAP Model: TVK Targets Goa, Punjab, and Delhi to Clinch National Party