ஒரு பக்கம் செந்தில் பாலாஜி.. இந்த பக்கம் திரும்பினால் உதயநிதி.. விஜய்க்கு சட்டசபையில் நடந்த சம்பவம்

  • சென்னை: தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று என்பதால், காலை முதலே புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு மற்றும் அரசியல் பரப்பரப்பில் மூழ்கியிருந்தது. இன்று அவையில் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் இருவரும்.. விஜய்க்கு எதிரில் அமர்ந்திருந்த சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றது.

    Advertisement

    முதல் பட்ஜெட் என்பதால்.. எப்போதும் போல கோட் சூட் அணியாமல்.. வித்தியாசமாக இன்று நீல நிற உடையில் விஜய் தனது அமைச்சரவை சகாகளுடன் வருகை தந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அதே வேளையில், சட்டமன்றத்தின் ஒட்டுமொத்த கவனமும் எதிர்த்தரப்பு வரிசையின் பக்கம் திரும்பியது.

    Advertisement

    காரணம் செந்தில் பாலாஜி.. உதயநிதி ஸ்டாலின்!

    இரண்டு பேர் - எதிரே விஜ

    கடந்த சில வாரங்களாகவே மாநில அரசியல் களத்தை அதிர வைத்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு, தீவிர லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, கைது நடவடிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீன் உத்தரவு என சட்டப் போராட்டங்களின் மையப்புள்ளியாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அவையில் எதிர் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

    அதேபோல் நேற்றைய தினம் தஞ்சாவூர் பேச்சு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் அன்று மாலையே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சட்டசபைக்கு வருகை தந்திருந்தார்.

    Advertisement

    விஜய்யின் இருக்கைக்கு நேர் எதிரே, புன்னகையுடனும், துணிச்சலான பார்வையுடனும் உதயநிதி ஸ்டாலினும் கொஞ்சம் பக்கத்திலேயே முதல் வரிசையில் செந்தில் பாலாஜியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி, பேரவையில் இருந்த அனைவரது புருவங்களையும் உயர்த்தச் செய்தது.

    வெறும் வழக்கமான பட்ஜெட் நிகழ்வு அல்ல

    கடந்த ஒரு மாதகால அரசியல் நகர்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு இந்த நிகழ்வு வெறும் வழக்கமான பட்ஜெட் நிகழ்வாகத் தோன்றவில்லை. டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த விஜய்யின் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், சட்டப்போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையைப் பெற்று செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.

    Advertisement

    அதேபோல், நேற்றைய தினம் அரசியல் ரீதியான விமர்சனங்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்தபோதிலும், உயர்நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு அதே நாளில் அவரை ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.

    அரசு தரப்பின் சட்டப் பிடிகளை உடைத்துக்கொண்டு, நீதிமன்றத்தின் உத்தரவுகளோடு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்து, விஜய்க்கு நேர் எதிரே அமர்ந்திருந்த உதய், செந்தில் பாலாஜியின் இந்த நகர்வு, ஆளும் விஜய் அரசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட்டது. விஜய் கைது செய்ய நினைத்த இருவருமே அவருக்கு எதிரே எந்த பாதிப்பும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.

    Advertisement

    நிதி அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்து, ரூ. 52,000 கோடி கல்வி நிதி, புதுமணப் பெண்களுக்கு தங்க நாணயம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போதிலும், சட்டசபையில் வீசிய இந்த அரசியல் வெப்பம்தான் அதிகம் கவனிக்கப்பட்டது!

    English Summary

    CM Vijay Faces Opposition Udhayanidhi & Senthil Balaji in High-Voltage Face-Off