7 தொகுதி இடைதேர்தல்.. 6ல் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. விஜய் டேபிளுக்கு போன ஷாக் ரிப்போர்ட்!

  • சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான இரண்டு விஜய பாஸ்கர்கள் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியா ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் 7 தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் போட்டியிட்டு ஜெயித்து ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 8 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

    Advertisement

    இடைத்தேர்தல் தாமதம்

    இந்த திடீர் ராஜினமாக்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    Advertisement

    தேர்தல் வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள காரணத்தால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மொத்தமுள்ள 7 காலியான தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி வரை தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு திட்டமிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    கட்சித்தாவல் தடை சட்டம்

    இவர்களின் செயல்பாடுகள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் வருவதால் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜெசிடி பிரபாகரிடம் புகார் கொடுத்திருக்கிறது அதிமுக தலைமை. மேலும், நீதிமன்றத்திலும் வழக்கில் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    Advertisement

    சபாநாயகரிடமும் நீதிமன்றத்திலும் இந்த பிரச்னை நிலுவையில் இருப்பதால், விரைவில் இடைத்தேர்தல் நடப்பது சாத்தியமில்லை என சொல்லப்படுகிற சூழலில், 8 தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுத்து பார்த்திருக்கிறது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். திருச்சி கிழக்கு தவிர மற்ற 7 தொகுதிகளிலும் எதிர்மறையாகத்தான் ரிசல்ட் வந்துள்ளதாம்.

    எதிர்மறையாக ரிசல்ட்

    இதனால், இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டலும், ராஜினாமா செய்த அதிமுக எம்.ஏல்.ஏ.க்களில் விஜயபாஸ்கர்களை தவிர மற்ற 5 பேருக்கும் சீட் இல்லை என விஜய்யின் உத்தரவின் பேரில் அந்த 5 பேரிடமும் தவெக பொது செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்த் தெரிவித்து விட்டாராம். இதனால் அந்த 5 பேரும் கடந்த சில வாரங்களாகவே அப்-செட்டாகியிருக்கிறார்கள். இதனால் தலைமை செயலகம் வருவதை குறைத்துக் கொண்டனர். இந்த நிலையில், தங்களுக்கு மீண்டும் சீட் இல்லையெனில், முக்கியத்துவம் மிகுந்த பொதுத்துறை நிறுவனங்களின் சேர்மன் பதவி வழங்குங்கள் என்று ஆனந்திடமும் ஆதவ் அர்ஜூனாவிடமும் சமீப நாட்களாக அந்த 5 பேரும் வற்புறுத்தி வருகிறார்களாம். அப்போது, " ஒவ்வொரு நாளும் இதையே என்னிடத்தில் வற்புறுத்தாதீர்கள். முதல்வரிடம் சொல்லிஇருக்கிறேன். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், உங்களுக்கு நல்லது நடக்கும். கொஞ்சம் பொருத்திருங்கள் " என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள் அமைச்சர்கள்.

    Advertisement

    இதற்கிடையே, "அதிமுகவில் உள்ள தங்களின் பழைய நண்பர்களிடம் பேசும் இவர்கள், மனம் விட்டுப் பேசிக் கொள்கின்றனர். நாங்கள் தப்பு பண்ணிட்டோம். இப்போதான் அந்த தப்பு புரிய வருகிறது. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டோம்.தொகுதியில் போட்டியிட சீட் இல்லை என்றும் சொல்லிவிட்டனர். எங்களுக்கு அப்படியே சீட் கொடுத்தாலும் எங்களால் ஜெயிக்க முடியாது. எந்த முக்கியத்துவமும் எங்களுக்கு தவெகவில் இல்லை. இனி எங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிற மாதிரி தெரியவில்லை " என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Cm Vijay gets a shocking report against TVK on Tamil Nadu Bye Elections