பெண் குழந்தைகள் இயற்கையின் பேரழகு! பெண் பிறக்கும்போது ஆளுமையும் பிறக்கிறது! சிஎம் விஜய் நெகிழ்ச்சி!

  • சென்னை: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பெண் குழந்தைகளை கொண்டாடி அவர்களுக்கு சம உரிமை முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வது நமது கடமை, பொறுப்பும் என கூறியுள்ள முதல்வர் விஜய், பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், அவர்களுக்கு கல்வி மற்றும் சம வாய்ப்புகள் உருவாக்குதல் மற்றும் எதிர்கொள்ளும் பாலின சமத்துவ முறைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    Advertisement

    மேலும் குழந்தை திருமணத்தை ஒழித்து, பெண் குழந்தைகளின் உரிமைகளை காப்பதும், பெண் குழந்தைகளின் குரல்கள், செயல்கள் மற்றும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement
    டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக.. தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக.. கனிமொழி ஆவேசம்!

    பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.

    பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!" என கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu CM Vijay extends International Day of the Girl Child wishes, stressing equal rights, quality education, safety and freedom for girls.