ஃபயர் சார்! மிரட்டிட்டீங்க.. பாராட்டி தள்ளிய முதல்வர் விஜய்.. திருமாவளவன் பகிர்ந்த சீக்ரெட்

  • சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாடு முடிந்ததும், தனக்கு போன் செய்த முதல்வர் விஜய், "சார் மிரட்டிட்டீங்க.." என்று வாழ்த்தினார். மறுநாள் சந்திக்கும் போதும் அதையேதான் விஜய் கூறினார். முதல்வர் விஜய்க்கு வயிற்றெரிச்சல் இல்லை. மனம்திறந்து பாராட்டுகிற பெருந்தன்மை உள்ளது. போட்டி பொறாமை இல்லை என்றார்.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்தியன் முஸ்லீம் லீக், விசிக கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் இனி தவெகவுடன் தான் கூட்டணி என்று கூறிய நிலையில் சிபிஐ, சிபிஎம் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்துவிட்டது.

    Advertisement

    விசிக இது பற்றி எதுவுமே கூறாமல் இருந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மாநாடு நடந்த போது தான் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் இனி 5 வருஷத்திற்கு எங்கள் ஆதரவு தவெகவுக்கு இருக்கும் என்றும் அறிவித்தார். இந்த கூட்டம் முடிந்த நிலையில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் "சார் மிரட்டிட்டீங்க.." என்று வாழ்த்தியதாக நேற்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது திருமாவளவன் கூறியதாவது:- உளுந்தூர்பேட்டையில் நடந்த விசிக மாநாடு முடிந்த பிறகு எனக்கு போன் செய்து முதல்வர் விஜய் பேசினார். அப்போது "சார் மிரட்டிட்டீங்க.. ஃபயர்.. ஃபயர்.." என்று வாழ்த்தினார். மறுநாள் சென்னை தலைமை செயலகத்தில் சந்திக்கும் போதும் கூட அதையேதான் முதல்வர் விஜய் கூறினார். முதல்வர் விஜய்க்கு வயிற்றெரிச்சல் இல்லை. மனம்திறந்து பாராட்டுகிற பெருந்தன்மை இருக்கிறது. அவரிடம் போட்டியோ, அல்லது பொறாமையோ இல்லை" இவ்வாறு அவர் பேசினார்.

    English Summary

    CM Vijay is a magnanimous person: VCK leader Thol Thirumavalavan spoke at the Tamil Nationalist Resurgence Conference held at Valluvar Kottam in Chennai. He recounted that after the VCK conference in Ulundurpet, Chief Minister Vijay called him and congratulated him, saying, "Sir, you were amazing." Vijay reiterated this sentiment when they met the following day. Thirumavalavan remarked that Chief Minister Vijay harbors no envy; he possesses the magnanimity to offer open praise and is free from rivalry or jealousy.