சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை முதல்வர் விஜய் நாளை பார்வையிட உள்ளார். இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் பார்வையிடுகிறார். காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் விஜய் பார்வையிடுகிறார்.
தமிழக முதல்வர் விஜய் அவ்வப்போது ஆய்வு பணிகளை மேற்கொள்வதினை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலைய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அந்த வகையில் நாளை முதல்வர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் செல்கிறார். கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர் என பல தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் இங்கு உள்ளன. முதல்வர் விஜய் நாளை இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை விஜய் பார்வையிடுகிறார். தமிழக அரசுடன் டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வணிக வாகன உற்பத்தி செய்து வரும் நிலையில், டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை விஜய் பார்வையிடுகிறார். இதே போன்று தமிழக அரசுடன் புர்ந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள செயிண்ட் கோபைன் நிறுவனம் கண்ணாடி உற்பத்தி செய்து வருகிறது. ஸ்ரீபெரும்பதூர் மாப்பாக்கம் சிப்காட்டில் இயங்கி வரும் இந்த ஆலையிலும் முதல்வர் விஜய் நாளை ஆய்வு செய்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.