சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் முதன்முறையாக அரசு முறை பயணமாக லண்டன் சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களிடம் முதலீடுகளை பெற்றதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் சிஎம் விஜய். ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டு கூட்டம் நடைபெறும் நிலையில் முதல்வர் விஜய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியிருக்கிறத.
இதற்கான அழைப்பை உலக பொருளாதார மன்ற தலைவர் அலோயிஸ் முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய்யின் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகம், அவருடன் 5 மத்திய அமைச்சர்களும் பயணம் மேற்கொள்கின்றனராம்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியிருந்தார். மேலும் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த 10ஆம் தேதி லண்டன் சென்ற அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிகாரிகள் சென்றார். ஆனால் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செல்லவில்லை. இது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை தொடங்கி வைத்ததோடு, அஜித்தை சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. மேலும் அந்த நிகழ்வில் நடிகை ஒருவர் கலந்து கொண்டதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே கடந்த 10 ஆம் தேதியே முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்ட நிலையில், 6 நாள் பயணத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பினார். முதல்வர் தமிழகம் திரும்பிய பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் மூலம் 15300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதி மொழி ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் 10000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவித்தது. மேலும் சம்மர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ், சிக்மா டெக்னாலஜி, எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் போன்ற நிறுவனங்களிடம் முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், இதற்கு பல கோடி செலவு செய்து லண்டன் பயணம் எதற்கு என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகள் முன்வைக்கப்பட்டது. முதல்வரின் லண்டன் பயணமே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தற்போது அடுத்த பயணத்திற்கு ரெடியாகிவிட்டார் முதல்வர் விஜய் என அரசுத்துறை வட்டாரங்கள் சொல்லுகின்றன. வரும் ஜனவரி மாதம் முதல்வர் விஜய் ஸ்விட்சர்லாந்து பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அழைப்பை உலக பொருளாதார மன்ற தலைவர் இந்த கூட்டத்தில் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் தொழில் முதலீட்டாளர்கள் பிரபல நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிலையில், விஜய் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தொழில்துறையும் தமிழக அரசும் ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருக்க முதல்வர் விஜயின் பயணத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்த பயணத்துக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதோடு முதல்வர் விஜய்யுடன் ஐந்து மத்திய அமைச்சர்களும் அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் உலாவுகின்றன. சிஎம் விஜயின் இந்த பயணத்தின் போது பல்வேஉ நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன. இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு மாநாடுகள் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் முன்னிலையில் விஜய் உரையாற்றுவார் என்றும் சொல்கின்றனர்.முதல்வர் விஜய்
லண்டன் பயணம்
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சுவிட்சர்லாந்து பயணம்
உலக பொருளாதார மன்றம்
பிரதமர் நரேந்திர மோடி